தமிழகத்தில் 25 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலாளர் என புதிய பொறுப்பை உருவாக்க மாவட்ட செயலாளர்களுக்கு தமிழக வெற்றிக்கழகம் தலைமை உத்தரவிட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு ஒன்றிய செயலாளர் உள்ளநிலையில் இனி 6 முதல் 30 ஒன்றிய செயலாளர் வரை நியமிக்கப்பட உள்ளனர். இதன் மூலம் நிர்வாகிகள் வாக்காளர்களை எளிதில் அணுக முடியும். பூத் கமிட்டியை வலுவாக்க முடியும் என விஜய் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
