விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்த இந்த கதை அஜித்துக்காக எழுதப்பட்டதா? இயக்குனர் சொன்னதும் ஷாக்கான தல!

By vinoth on ஆடி 3, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய். தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதற்கேற்றார் போல அவரின் சுமாரான படங்கள் கூட நல்ல வசூலைப் பெற்று வருகின்றன.

தற்போது மாஸ் நடிகராக இருக்கும் விஜய், 90 களில் தனக்கான இடத்துக்காக போராடிக் கொண்டிருந்தார். அப்போது முழுக்க முழுக்க அவர் நடித்த ஆக்‌ஷன் திரைப்படம் என்றால் அது திருமலைதான். அந்த படத்தை அறிமுக இயக்குனர் ரமணா இயக்கி இருந்தார்.

   

அதுவரை மீசை க்ளீன் ஷேவ் கெட்டப்பில் இருந்த விஜய் அந்த படத்தில்தான் முதல்முறையாக தன் கெட்டப்பை மாற்றினார். திருமலை படம் ஒரு ஆக்‌ஷன் படம் என்றாலும் அதிலும் ஆழமான காதல் காட்சிகள் விஜய்க்கும் ஜோதிகாவுக்கும் இடையில் இருக்கும். இந்த படம் விஜய்யை முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றிய படம்.

   

இந்த படத்தை இயக்கிய ரமணா அதன் பின்னர் சுள்ளான் மற்றும் ஆதி போன்ற படங்களை இயக்கினார். ஆனால் அந்த படங்கள் திருமலை அளவுக்கு வெற்றிப் பெறவில்லை. இந்நிலையில் இந்த கதையை அவர் அஜித்துக்காகதான் எழுதியதாக இப்போது பகிர்ந்துள்ளார்.

 

இதுபற்றி அவரே அஜித்திடம் அதை ஒருமுறை சொன்னாராம். அவர் பகிர்ந்த தகவலில் “திருமலை முடிந்ததும் நான் ஒருமுறை அஜித்தை சந்தித்தேன். அப்போது இந்த கதையை நான் உங்களுக்காகதான் எழுதினேன் சார் என்றேன். அதைக் கேட்டு அவர் “என்ன சார் சொல்றீங்க?” என ஷாக் ஆனார். நான் அவரிடம் “ஆமாம் சார், ஹீரோ மெக்கானிக். ரேஸ்களில் கலந்துகொள்பவர். அப்படியென்றால் அது உங்களைத் தவிர வேறு யாருக்குப் பொருந்தும்” எனக் கூறினேன்” என்று பகிர்ந்துள்ளார்.