புதுச்சேரியில் வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி ரோடு ஷோ நடத்த திட்டமிட்டிருந்த விஜய் தன்னுடைய முடிவை திடீரென மாற்றியுள்ளார். அதாவது தொடர் கனமழை காரணமாக ரோடு ஷோ திட்ட முத்தி வைக்கப்படுவதாக தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் சற்று முன் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரோடு ஷோ நடத்த அனுமதி இல்லை எனவும் வேண்டுமானால் திடலில் பொதுக்கூட்டமாக நடத்திக் கொள்ளலாம் என அம்மாநில காவல்துறை கூறியிருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
