Connect with us

பிளாக்பஸ்டர் வெற்றி படத்தை கொடுத்தும் தனது அடுத்த படத்தின் சம்பளத்தை குறைத்த விஜய் சேதுபதி.. நிஜத்திலயும் மகாராஜான்னு நிரூபிச்சிட்டாரே..!!

CINEMA

பிளாக்பஸ்டர் வெற்றி படத்தை கொடுத்தும் தனது அடுத்த படத்தின் சம்பளத்தை குறைத்த விஜய் சேதுபதி.. நிஜத்திலயும் மகாராஜான்னு நிரூபிச்சிட்டாரே..!!

 

தமிழ் சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் அறிமுகமாகி இன்று முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்துள்ளார். ஹீரோவாக இருந்தாலும் சரி வில்லனாக இருந்தாலும் சரி விஜய் சேதுபதி நடிப்பு மிரட்டலாக இருக்கும். இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

மகாராஜா Review: விஜய் சேதுபதி வியாபித்த களத்தில் கிட்டிய அனுபவம் எப்படி? | Vijay  Sethupathi starrer maharaja movie review - hindutamil.in

   

தற்போது விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா படம் ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மகாராஜா படத்தை நெத்திலி சுவாமிநாதன் இயக்கினார். இந்த படத்தில் நடராஜ், முனிஸ் காந்த், சிங்கம்புலி, பாரதிராஜா, வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்தனர். கடந்த 14-ஆம் தேதி ரிலீசான மகாராஜா படம் இன்று வரை 55 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Play the villain role in the vijay movie Rs 10 crore salary for Vijay  Sethupathi? | விஜய் படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு ரூ.10 கோடி  சம்பளம்?

இதுவரை தான் நடித்த படங்களில் விஜய் சேதுபதி 15 கோடி ரூபாய், 17 கோடி ரூபாய் என சம்பளம் கேட்டுள்ளார். ஆனால் இப்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பாண்டியராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி தனது அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க போவதாகவும் செய்திகள் உலா வருகிறது.

இயக்குநர் பாண்டிராஜ் பிறந்த நாள் ஸ்பெஷல்: எந்நிலையிலும் தனித்தன்மையை  இழக்காத இயக்குநர் | director pandiraj birthday special article -  hindutamil.in

பாண்டியராஜ் இயக்கிய நம்ம வீட்டு பிள்ளை, கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தான் புதிதாக கமிட் ஆகும் பாண்டிராஜனின் படத்திற்காக விஜய் சேதுபதி 10 கோடி ரூபாய் தான் சம்பளமாக வாங்க உள்ளாராம். மாபெரும் வெற்றிக்குப் பிறகு கூட சம்பளத்தை அதிகரிக்காமல் விஜய் சேதுபதி குறைத்து தரமான படங்களில் நடித்து வருகிறார். இந்த தகவலை வலைப்பேச்சு யூடியூப் சேனலில் கூறியுள்ளனர்.

பல இடங்களில் அவமானம்.. திட்டிக்கொண்டே அழுதிருக்கிறேன்.. எமோஷனல் ஆன விஜய்  சேதுபதி | Vijay Sethupathi Emotional Talks about His Journey - Tamil  Filmibeat

author avatar
Priya Ram
Continue Reading
To Top