Connect with us

மலை போல் நம்பி இருக்கும் மக்கள் செல்வன்.. 50-வது படமான மகாராஜா ரிலீஸ் எப்போது தெரியுமா..?

CINEMA

மலை போல் நம்பி இருக்கும் மக்கள் செல்வன்.. 50-வது படமான மகாராஜா ரிலீஸ் எப்போது தெரியுமா..?

 

முன்னணி நடிகரான விஜய் சேதுபதி மகாராஜா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விஜய் சேதுபதி ஐம்பதாவது படமாகும். குரங்கு பொம்மை படத்தை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன். அவர்தான் மகாராஜா படத்தையும் இயக்குகிறார்.

   

இந்த படத்தில் நடராஜ் சுப்பிரமணியம், அருள் தாஸ், பாய்ஸ் மணிகண்டன் உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோ சுதன் சுந்தரம் மற்றும் தி ரூட் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து மகாராஜா படத்தை தயாரித்துள்ளனர். இதற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

பட குழுவினர் விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு மகாராஜா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். படம் ரிலீஸ் ஆன பிறகு நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என பட குழுவினர் ஏற்கனவே அறிவித்தனர். தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. எனவே வருகிற மே மாதம் 16-ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

actor vijay sethupathi

author avatar
Priya Ram
Continue Reading
To Top