அந்த மனசு தான் சார் கடவுள்.. ICU வார்டில் விஜய் சேதுபதியால் கண்ணீர் விட்ட ரசிகர்.. நெகிழ்ச்சி சம்பவம்..!!

By admin on ஆனி 20, 2024

Spread the love

பிரபல நடிகரான விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். நடிகர்களுக்கு ஐம்பதாவது படம் என்றாலே ஸ்பெஷல் தான். அந்த வகையில் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா படம் கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் நட்டி நட்ராஜ், அபிராமி, திவ்யபாரதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Maharaja | Maharaja trailer: Vijay Sethupathi plays an ordinary barber on a  mission to get his 'Lakshmi' back - Telegraph India

   

இந்த படத்தில் அனுராக் காஷ்யப் வில்லனாக மிரட்டி இருக்கிறார் படத்தில் விஜய் சேதுபதியின் எதார்த்தமான நடிப்பு மக்களை கவர்ந்துள்ளது.  மகாராஜா படத்தின் ஷூட்டிங் சென்னையில் இருக்கும் ஒரு ஹாஸ்பிடலில் நடைபெற்றது. அங்கு விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் இருந்தனர். ஒரு ஓரத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும், அவரது மகளும் அழுது கொண்டிருந்தனர். அவர்களிடம் விஜய் சேதுபதி ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டார்.

   

Maharaja public Review: விஜய்சேதுபதியின் மகாராஜா படம் எப்படி இருக்கு..  பொதுமக்கள் கருத்து! | Vijay sethupathi's Maharaja movie public Review -  Tamil Filmibeat

 

உடனே அந்த பெண் எனது மகன் உங்களுடையே பெரிய ரசிகர். உங்களை மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார். உடனே விஜய் சேதுபதி நான் சிறிது நேரம் கழித்து வருகிறேன் என கூறி விட்டு ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். பின்னர் அந்த பெண்ணையும் அவரது மகளையும் தேடி சென்றார். அப்போது விஜய் சேதுபதியை பார்த்த அந்தப் பெண் தனது மகன் கோமாக்கு சொல்லக்கூடிய நிலையில் ICU வார்டில் இருப்பதாக கூறினார்.

விஜய் சேதுபதி நடித்த சீரியல் எது தெரியுமா? அதில் பட்ட அவமானமும்,  அனுபவமும்.. மனுஷன் கண் கலங்கிட்டாரே | Actor Vijay Sethupathi talked about  the experience he got while ...

விஜய் சேதுபதி ICU வார்டில் நுழைந்த உடன் அந்த வாலிபரின் கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்தது. உன்னுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கலாம் என வந்தேன் நீ இப்படி படுத்துக் கொண்டிருக்கிறாய் என அந்த வாலிபரை பார்த்து விஜய் சேதுபதி கூறியுள்ளார். எனது மகன் இத்தனை நாட்கள் எந்த உணர்ச்சியும் இல்லாமல் இருந்தான். இப்போது உங்களை பார்த்ததும் கண்களில் இருந்து கண்ணீர் வருவதே எங்களுக்கு பெரும் நம்பிக்கையாக இருக்கிறது என வாலிபரின் தாய்  கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி - தமிழ் விக்கிப்பீடியா

விஜய் சேதுபதி தனது கையில் இருந்த ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் பணத்தை அந்த பெண்ணிடம் கொடுத்து மருத்துவ செலவுக்கு வைத்துக் கொள்ளுமாறு கூறினார். நாளை காலை எனது மேனேஜர் உங்களை வந்து பார்ப்பார் நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் என கூறியுள்ளார். இந்த நிகழ்வை மகாராஜா படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்த நபர் கூறியுள்ளார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vijay sethupathi: விஜய் சேதுபதி கற்கத் துவங்கிய புது விஷயம்.. மனுஷன்  சும்மாவே இருக்க மாட்டேங்கறாரே! | Actor Vijay sethupathi started learning  music - Tamil Filmibeat