விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் பணியாற்றும் முன்னணி நடிகராவார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து குறைந்த காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஆனவர். ஆரம்பத்தில் பின்னணியில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் விஜய் சேதுபதி.
2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் விஜய் சேதுபதி. தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும், நானும் ரவுடிதான், சேதுபதி, சூது கவ்வும், ஆரஞ்சு மிட்டாய் போன்ற பல திரைப்படங்களில் வயதானவர் நடுத்தர வயது தோற்றம் என பல தோற்றங்களை எடுத்து நடித்து பிரபலமான விஜய் சேதுபதி.
மாஸ்டர், விக்ரம் வேதா போன்ற திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்து புகழ் பெற்றவர் விஜய் சேதுபதி. சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி பழனியில் முருகனை தரிசிக்க சென்ற போது தனக்கு ஏற்பட்ட சிக்கலைப் பற்றி கூறியிருக்கிறார்.
விஜய் சேதுபதி கூறியது என்னவென்றால், எனக்கு சிறுவயதிலிருந்தே முருகனை ரொம்ப பிடிக்கும். அப்படி ஒரு கலெக்ஷன் இருக்கும். ஆனா நான் பழனிக்கு சூட் போகும்போது நான் சாமி கும்பிட முதலில் போனேன் அப்போ நான் வரேன்னு கூட்டத்தை நிப்பபாட்டி வச்சாங்க. அது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. ஒவ்வொருத்தரும் அவங்க மன கஷ்டத்துக்கு தான் சாமி பாக்க வராங்க. இதுல நம்ம நடுவுல வந்து தடுக்குறோமே அப்படின்னு தோணுச்சு. அதனால மறு வருஷம் நாங்க போகும்போது ஒரு போலீஸ் என்ன மேல கூப்பிட்டாரு இல்ல நான் இங்க இருந்து முருகனுக்கு கும்பிட்டுட்டு போறேன்னு நான் கீழ இருந்தே முருகனை நினைச்சு கும்பிட்டுட்டு வந்துட்டேன் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் விஜய் சேதுபதி.