#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பன்முகங்களைக் கொண்டவர் விஜய் சேதுபதி. பின்னணியில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கிய விஜய் சேதுபதி 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சேதுபதி, 96, கருப்பன், விக்ரம் வேதா போன்ற தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மிகக் குறுகிய காலத்தில் அதிகப்படியான படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றவர் விஜய் சேதுபதி.
#image_title
மற்ற நடிகர்கள் போல் ஹீரோ சப்ஜெக்ட் மட்டும் தான் நடிப்பேன் என்று கூறாமல் வில்லன் தோற்றத்திலும் வயதான தோற்றத்திலும் கேமியோ தோற்றத்திலும் என பல படங்களில் நடித்து தனித்துவமான புகழை பெற்றவர் விஜய் சேதுபதி. இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், நான் இனிமே கேமியோ ரோலில் நடிக்க மாட்டேன்னு சொன்னதுக்கு என்ன காரணம் என்பதை ஓபனாக உடைத்து பேசியுள்ளார். அதாவது, பண்ற படத்துக்கோ, சொந்த வாழ்க்கையை வாழுறதுக்கோ நேரம் பத்தலை.
இதுல இப்படி நடிக்க நேரம் இல்ல. என் படத்துல பண்ணுங்கன்னு வந்து உரிமையா கேக்குறாங்க. நான் கேமியோ ரோல் பண்ணுறதால அட்வான்டேஜ் எடுத்துக்குறது. பண்ணாவிட்டால் கோபப்படுறது இப்படி இருக்கு. பண்ணவே மாட்டேன்னு சொல்றவங்ககிட்ட இவங்களுக்கு எந்த வருத்தமும் இல்ல. ஆனால் நல்லது பண்ண போயி அதுக்கப்புறம் கெட்ட பேரு வாங்குறதுல எனக்கு என்ன பலன் இருக்கு.
இந்த மாதிரி வருறதால எனக்கு தொந்தரவு அதிகமா இருக்கு. இதை யாரும் புரிஞ்சிக்க வைக்க முடியல. வில்லனா பண்ணும்போது சியா விஷயங்க காயப்படுத்துது. ஆனால் நான் தான் இதை ஆரம்பிச்சேன். நான் என்ன பண்ணுறேனோ அது எனக்கு சந்தோசம். இனி போதும். யாருக்கும் பாரமா இருக்க விரும்பல. தேவையில்லாத மனஸ்தாபம் வருது. படம் பண்ணி விரோதி ஆகுறத விட பண்ணாம நண்பரா இருப்பது எவ்ளோ பெட்டர் என்று பேசியுள்ளார்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…