விஜய் சேதுபதிக்கு ஆதரவாக வரிந்துகட்டிய அதிமுக…. ‘நாங்க இருக்கோம்’….. பின்னணியில் நடக்கும் அரசியல் கணக்கு…. கொந்தளித்த தவெக….!

By Nanthini on புரட்டாதி 15, 2026

Spread the love

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், நடிகர் விஜய் சேதுபதி போட்டியாளர் ஷாஷிதாவிடம் தலைமைப் பண்பு குறித்துப் பேசிய கருத்துகள் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. “தலைவராகப் பதவி ஏற்கும் முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், பிரச்சனை வந்ததும் எதிர்க்கட்சிகள் மீது பழியைப் போட்டுவிட்டு ஓடுவது தலை தலைமைப் பண்பு அல்ல” என்று அவர் கூறியிருந்தார். இந்த பேச்சு தமிழக முதல்வரை மறைமுகமாக விமர்சிப்பதாகக் கூறி, தவெகவினர் சமூக வலைத்தளங்களில் விஜய் சேதுபதிக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அதேவேளையில், இந்த விவகாரத்தில் விஜய் சேதுபதியின் கருத்துரிமையைப் பாதுகாக்க அதிமுக சட்டரீதியாகத் துணைநிற்கும் என்று அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். இதனால், அரசியல் வட்டாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த பேச்சுகள் மேலும் தீவிரமடைந்தன. இதற்கிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

   

அதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “விஜய் சேதுபதி பேசியதை நான் நேரில் பார்க்கவில்லை; பார்த்தால் தானே பதில் சொல்ல முடியும்” என்று மிகச் சுருக்கமாகக் கூறி அந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும், முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்ற பயணங்கள் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்ட பிறகே அது குறித்துத் தெளிவான கருத்து தெரிவிக்க முடியும் என்றார்.

   

லண்டன் பயணத்தின் போது வெளியாகும் புகைப்படங்களைப் பார்க்கும்போது, தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியாக அது தெரியவில்லை என்றும் அவர் விமர்சித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு பேச்சு அரசியல் களத்தில் இத்தனை பரபரப்பை ஏற்படுத்தியிருப்பது இணையவாசிகளிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.