ரொம்ப பெருமையா இருக்கு…! ஒரு காலத்துல துபாய்ல சம்பளத்துக்கு வேலை…. இப்ப புர்ஜ் கலிஃபாவில் விஜய் சேதுபதி….!!!

By Mahalakshmi on ஐப்பசி 29, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கின்றார். ஹீரோவாக முதலில் கலக்கி வந்த இவர் தற்போது வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் என எது கொடுத்தாலும் அதற்கு ஏற்றவாறு போல் மாறி நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கின்றார்.

   

தற்போது தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துவரும் இவர் பான் இந்தியா நடிகராக மாறி இருக்கிறார் என்று தான் கூற வேண்டும். இவர் நடிப்பில் கடைசியாக காத்து வாக்குல இரண்டு காதல், யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன், கடைசி விவசாயி, விடுதலை, விக்ரம், ஜவான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.

   

 

பிசியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு துபாயில் வேலை செய்து வைத்திருந்தார். அதே ஊரில் விஜய் சேதுபதிக்கு கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு சினிமா துறையில் செல்வாக்கு மிகுந்த நட்சத்திர விருது வழங்கி கௌரவம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து துபாயின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலிபாவில் பிரபலமான நடிகர்களின் புகைப்படங்கள் இடம் பெறுவது வழக்கம்.

 

அந்த வகையில் விக்ரம் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் சமயத்திலும் அதைத் தொடர்ந்து ஜவான் திரைப்படம் ட்ரெய்லர் ரிலீஸ் சமயத்திலும் விஜய் சேதுபதியின் புகைப்படம் புர்ஜ் கலிபா கட்டிடத்தில் இடம்பெற்கின்றது. இதைத் தொடர்ந்து புர்ஜ் கலிப்பாவில் இடம் பெறும் நான்காவது இந்தியன் என்ற பெருமையை விஜய் சேதுபதி பெற்றிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் துபாயில் வேலை பார்க்கும் போது விஜய் சேதுபதி எடுத்த புகைப்படத்தையும் தற்போது புர்ஜ் கலிபாவில் இடம் பெற்றிருந்த புகைப்படத்தையும் ஒன்று சேர்த்து பல மீம்ஸ்களை உருவாக்கி வெளியிட்டு வருகிறார்கள்.