லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு வேட்டை பலர் நடித்துள்ளனர். மாஸ்டர் படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. விஜய் சேதுபதி வில்லனாக மிரட்டிய அனைத்து காட்சிகளும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது.

இந்நிலையில் விஜய் சேதுபதி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, மாஸ்டர் படத்தில் என்ட்ரி சினை இப்படி எடுக்கலாம் என லோகேஷ் கனகராஜ் கூறினார். எனக்கு ஃபர்ஸ்ட் பயம். ஆனால் லோகேஷ் மீது நம்பிக்கை இருந்தது. சிலர் உருவத்தைப் பார்த்து கேலி செய்வார்கள். அதை எல்லாம் நான் கண்டுகொள்ள மாட்டேன்.

அப்படி யாராவது செய்தால் அது அவர்களது பிரச்சினையாக இருக்கும் என்றுதான் நினைப்பேன். முக்கியமாக ஒரு படத்தில் நடிகன் சரியாக நடித்து விட்டால் மற்ற எதுவும் கண்ணுக்கு தெரியாது. அப்படி சரியாக நடிக்கவில்லை என்றால் பின்னால் ஓடும் கடிகாரத்தின் நொடிகள் கூட கரெக்டாக தெரியும் என கூறினார்.
View this post on Instagram
