#image_title
விஜய் சேதுபதி நடிப்பில் அவரின் 50 ஆவது படமான. ஜூன் 14-ஆம் தேதி மகாராஜா ரிலீஸ் ஆனது. இந்த படத்தை நித்திலன் சுவாமிநாதன் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதியுடன் நட்டி நடராஜ், அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் சிங்கம்புலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் ரிலீஸானது முதல் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த ஆண்டில் மிகப்பெரிய ஓபனிங் பெற்ற மூன்றாவது படமாக மகாராஜா படம் உள்ளது. இந்த படம் முதல் மூன்று நாட்களில் 25 கோடியில் இருந்து 30 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்திருக்கும் என சொல்லப்படுகிறது.
விஜய் சேதுபதி தொலைந்த ஒரு குப்பைத் தொட்டியை தேடி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். அதனை எப்படி கண்டுபிடித்து தருவது என காவலர்கள் கோபமாக கேட்கின்றனர். அப்போது அந்த குப்பை தொட்டியில் என்ன தான் இருக்கிறது என்று சொல்வது கதைக்களமாக அமைகிறது. இறுதியில் அவர் குப்பைத் தொட்டிக்காக வரவில்லை என்றும் தன்னுடைய மகளைப் பாலியல் பலாத்காரம் செய்த ஒருவரை தேடிதான் வந்துள்ளார் என்றும் தெரியவருகிறது.
அவரைக் கண்டுபிடித்தாரா இறுதியில் வில்லனை எப்படி பழிவாங்கினார். க்ளைமேக்ஸ் காட்சியில் விஜய் சேதுபதியின் சந்தோஷத்தைக் கெடுத்து விட்டதாக நினைக்கும் வில்லன் அடையும் ஷாக் என்ன என்பதே இந்த படத்தின் திரைக்கதை. முதல் பாதி கருப்பு நகைச்சுவையாகவும், இரண்டாவது பாதி எமோஷனல் ஆகவும் இருப்பதாக விமர்சனங்கள் வெளியாகி உள்ளது.
இந்த படம் நல்ல வசூலைப் பெற்றாலும் இது கொரியன் படமான ஓல்ட் பாய் படத்தின் கதையைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதுபோல மலையாளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான இரட்ட படத்தின் காப்பி என்றும் ஒரு விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒருசிலரோ இந்த படத்தின் இறுதியில் நடக்கும் ஒரு டிவிஸ்ட் பல ஆண்டுகளுக்கு முன்பே அஜித்தின் அமர்க்களம் படத்தில் வைக்கப்பட்ட ஒரு காட்சிதான் என்றும் விமர்சித்து வருகின்றனர்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…