தவறான முடிவால் வந்த விளைவு… படம் இல்லாமல் அவல நிலைக்கு தள்ளப்பட்ட நடிகர் விஜய்சேதுபதி.. அட கொடுமையே..

By admin on மார்கழி 21, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இடத்தில் இருந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. துவக்கத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார். தென்மேற்கு பருவக்காற்று படம்தான் அவருக்கு நடிகர் என்ற அடையாளத்தை கொடுத்தது. தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சூது கவ்வும், பீட்சா உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதியின் நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. ஒரு கட்டத்தில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராக விஜய் சேதுபதியை கொண்டாட துவங்கினர். தொடர்ந்து அவர் நல்ல கேரக்டர் நிறைந்த படங்களில் அவர் நடித்திருந்தால், அப்படியே அவர் வேற லெவலில் சினிமா பயணத்தை தொடர்ந்திருக்கலாம்.

   

ஆனால் திடீரென அவர் கமர்ஷியல் ஹீரோவாக மாறி, அதிரடி சண்டைக்காட்சிகளில் ஹீரோயிசம் காட்டத் துவங்கினார். மாஸ் நடிகராக தன்னை திரைபிம்பத்தில் காட்டினார். ஹீரோவாக இருந்த அவர் திடீரென வில்லனாகவும் ரஜினி, கமல், விஜய் போன்றவர்களின் படங்களில் நடித்தார். இப்படி ஹீரோ, வில்லன் என இரு தரப்பிலும் கமர்ஷியல் ஹீரோவாக தன்னை காட்டிக்கொண்ட அவரால், தொடர்ந்து தனக்கான ஒரு இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.

   

 

இதுகுறித்து எழுத்தாளர் ராஜகம்பீரன் கூறுகையில், பக்கத்து வீட்டு பையன் நடிகர் முரளியை போல இருக்கிறார் என்றுதான் விஜய் சேதுபதியை ரசிகர்கள் துவக்கத்தில் பார்த்தனர். முதலில் நல்ல கதைகளை, படங்களை தேர்வு செய்யும் வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு இல்லை. ஆனால் கிடைத்த படங்களில், கிடைத்த கேரக்டரில் நடித்து வெற்றி பெற்றார். பிறகு அவருக்கான படங்களை, கதைகளை தேர்வு செய்வதில் அவர் சரியான முடிவுகளை எடுக்கவில்லை.

கேரக்டர் நடிகரான அவர் சிவாஜியை போன்று சினிமாவில் பயணித்திருக்க வேண்டும். கமர்ஷியல் ஹீரோவாக மாறியதால், ஒரு நல்ல கேரக்டர் நடிகனை அவரே இழந்துவிட்டார். இல்லையென்றால், அவரது திரைபயணம் வேறுமாதிரியாக இருந்திருக்கும். விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க சம்பளம் ரூ. 15 கோடி தர முன்வருகின்றனர். ஆனால், அவரே ஹீரோவாக நடிக்க ரூ. 6 கோடி தர யோசிக்கின்றனர். நல்ல கதைகளில் அவர் நடித்தால் மட்டுமே பழைய இடத்துக்கு வரமுடியும் என ராஜகம்பீரன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.