ஷாக்கிங் ட்விஸ்ட்… விஜய் சேதுபதி அவுட்.. இங்கேயும் “ரீல்ஸ்” பஞ்சாயத்து… பிக் பாஸ் காமன் மேன் பிளான் எடுபடுமா..?

By Swetha on ஆடி 10, 2026

Spread the love

பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் முதல்முறையாக சாதாரண மக்களுக்காக ‘பிக் பாஸ் காமன் மேன்’ என்ற புதிய நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டு, அதற்கான ப்ரோமோவும் வெளியானது. ஆனால், தற்போது இந்த நிகழ்ச்சி குறித்து சில அதிர்ச்சியான தகவல்கள் கசிந்துள்ளன. இதுவரை கமல்ஹாசனுக்குப் பிறகு விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த காமன் மேன் பதிப்பை அவர் தொகுத்து வழங்கப்போவதில்லை என்று கூறப்படுகிறது. அதற்குப் பதிலாக, முந்தைய சீசன்களில் விளையாடிய முத்துக்குமாரன் அல்லது மாயா கிருஷ்ணன் ஆகிய இருவரில் ஒருவர் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

அடுத்த அதிர்ச்சியாக, ‘காமன் மேன்’ என்று சொல்லிவிட்டு இதில் முற்றிலும் சாதாரண மக்களைக் கூட்டி வராமல், சோசியல் மீடியாவில் ஏற்கனவே பிரபலமாக இருப்பவர்களைத்தான் போட்டியாளர்களாகக் கொண்டு வர விஜய் டிவி திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. கடந்த சீசனில் திவாகர் போன்ற சோசியல் மீடியா பிரபலங்கள் வந்தபோது நிகழ்ச்சி சுவாரசியமில்லாமல் போனதாக விமர்சனங்கள் எழுந்தன. எனவே, இந்த முறையும் அதே தவறைச் செய்யப் போகிறார்களா அல்லது ப்ரோமோவில் சொன்னது போல நிஜமாகவே சாதாரண மக்களுக்கு வாய்ப்பு தருவார்களா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

   

இந்த பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி என்பது வழக்கமான முழு சீசன் கிடையாது; இது வெறும் 25 எபிசோடுகள் மட்டுமே கொண்ட ஒரு சிறிய தொடர் ஆகும். இந்த 25 நாட்களில் சிறப்பாக விளையாடித் தேர்வாகும் ஒரு சிலர் மட்டுமே, நேரடியாக மெயின் நிகழ்ச்சியான ‘பிக் பாஸ் சீசன் 10’ வீட்டிற்குள் செல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள். விஜய் டிவியில் வரும் ஜூலை 13 முதல் ‘செகன்ட் லவ்’ என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ள நிலையில், அது முடிந்த பிறகு இந்த பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.