முன்னணி நடிகரான விஜய் சேதுபதி மகாராஜா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விஜய் சேதுபதி ஐம்பதாவது படம். சமீபத்தில் துபாயில் இருக்கும் பூர்ஜ் கலிப்பாவில் அந்த படத்தின் டிரைலர் ஒளிபரப்பப்பட்டது. ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் விஜய் சேதுபதி சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். அவருக்கு தென்மேற்கு பருவக்காற்று படம் திருப்புமுனையாக அமைந்தது.

அதன் பிறகு பீட்சா, நானும் ரவுடிதான், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விஜய் சேதுபதியின் மகாராஜா படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இந்நிலையில் எல்லா கோமாளிகளும் விஜய் சேதுபதி நடித்த கேரக்டர் வேஷம் போட்டுள்ளார்கள்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விஜய் சேதுபதி கோமாளிகளோடு கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கிறார். அவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான கிராண்ட் மாஸ்டர் செஃப் இந்தியா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் விஜய் நான் ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். அது ரொம்ப சீரியஸ் ஆக இருக்கும். ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலகலப்பாக சிரிக்க முடிகிறது.

இங்கு நிகழ்ச்சி முழுக்க சிரிப்பு மட்டும் தான் இருக்கிறது. இந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என வெளிப்படையாக பேசி உள்ளார். இது தொடர்பான ப்ரோமோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே விஜய் டிவியில் இருந்த கோமாளிகள் சன் டிவியின் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சிக்கு சென்றனர். இப்போது சன் டிவி பற்றி விஜய் சேதுபதி பேசியது வைராலகி வருகிறது இந்த நிலையில் குரேஷி விஜய் சேதுபதி குக் வித் கோமாளிக்கு என்ட்ரி கொடுப்பதை தெரிவிக்கும் விதமாக ஒரு ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram
