Connect with us

விஜய்சேதுபதி தேடும் லட்சுமி யாருதான்பா..! மகாராஜா படத்தின் விமர்சனம்.. 50வது படத்தில் வெற்றி பெற்றாரா மக்கள் செல்வன்..?

CINEMA

விஜய்சேதுபதி தேடும் லட்சுமி யாருதான்பா..! மகாராஜா படத்தின் விமர்சனம்.. 50வது படத்தில் வெற்றி பெற்றாரா மக்கள் செல்வன்..?

 

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் மகாராஜா திரைப்படத்தின் பிரீமியர் ஷோ விமர்சனம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் 50-வது திரைப்படம் மகாராஜா இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் சேதுபதி. படிப்படியாக முன்னேறி தற்போது பாலிவுட்டில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்து நிற்கின்றார். விஜய் சேதுபதியின் கால்ஷீட் வேண்டி பல பிரபலங்கள் காத்திருக்கிறார்கள்.

   

முன்பு போல் இல்லாமல் தற்போது சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகின்றார். குரங்கு பொம்மை என்ற திரைப்படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் மகாராஜா. இப்படம் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமாகும். இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்ட நிலையில் படத்தின் முழு விமர்சனத்தை பத்திரிகையாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

மகாராஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி முடி திருத்தும் தொழிலாளியாக நடித்திருக்கின்றார் விபத்து ஒன்றில் தனது மனைவி திவ்யபாரதியை இழந்து விட மகளை மிகவும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார். மற்றொரு பக்கம் திருட்டு தொழிலில் செய்யும் அனுராக் காஷ்யப், திருடி செல்லும் இடங்களில் எல்லாம் பெண்களை பலாத்காரம் செய்வதை வாடிக்கையாக வைத்து வருகின்றார்.

இதற்கிடையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று லட்சுமியை காணவில்லை என்று விஜய் சேதுபதி புகார் அளிக்க லட்சுமி யார் என போலீசார் தலையை பிச்சு கொண்டிருக்கிறார்கள். இப்படி படத்தின் முதல் பாதி நிறைவடைய இரண்டாம் பாதியில் லட்சுமியை கண்டுபிடித்துக் கொடுத்தால் பெரிய தொகையை லஞ்சமாக கொடுப்பதாக காவல்துறையினருக்கு டீல் பேசுகின்றார்.

கெட்ட போலீசாக வரும் நட்டி நட்ராஜ் அந்த லட்சுமி தேட பின்னால் பலத்திற்கும் விஷயங்கள் வெளி வருகின்றது . ட்விஸ்ட்க்கு மேல் ட்விஸ்ட் வைத்து இரண்டாம் பாதியில் கிளைமாக்ஸ் மிகப்பெரிய ட்விஸ்ட்-ஆக அமைகின்றது. ஒவ்வொரு காட்சியிலும் மகாராஜாவாக நடித்து அசத்தியிருக்கின்றார் விஜய் சேதுபதி. நீண்ட நாட்களுக்கு பிறகு அவரின் கம்பாக்காக இந்த திரைப்படம் இருக்கின்றது. தரமான படத்தை தனது ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று மெனக்கெட்டை படத்தில் நடித்திருக்கின்றார் விஜய் சேதுபதி.

அவர் மட்டும் இல்லாமல் வில்லனாக நடித்த நட்டி நட்ராஜ், அனுராக் காசிப் ஆகியோரும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நித்திலன் சுவாமிநாதனின் இயக்கம் மிகச் சிறப்பாக இருந்தது. படத்தில் ஒரே ஒரு பாடல் என்றாலும் அப்பாடல் மனதை வருடும் வகையில் இருந்தது. முதல் பாதியில் சில இடங்களில் என்ன நடக்கின்றது என்பது தெரியாமல் ரசிகர்களை குழப்பினாலும் கடைசியில் அனைத்தையும் விளக்கி படம் ஒரு மாஸ்டர் பீஸ் படமாக தயாராகி இருக்கின்றது. இந்த படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top