BIG BREAKING: விஜய் அழைப்பு விடுத்தார்… தமிழக அரசியலில் திக் திக் நிமிடம்….!

By Nanthini on வைகாசி 6, 2026

Spread the love

தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை முதல்வராகப் பதவியேற்கத் தயாராகி வரும் நிலையில், ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிப்பதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் பெரும்பான்மையை உறுதிப்படுத்த 118 உறுப்பினர்களின் ஆதரவு அவசியம் என்பதால், கவர்னர் அர்லேக்கரின் அறிவுறுத்தலின்படி விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளுக்கு ஆதரவு கோரி விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

ஏற்கனவே தவெகவுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிகவின் நிலைப்பாட்டைப் பொறுத்தே விஜய்யின் அரசியல் நகர்வுகள் அமையும் என்பதால், தற்போது தமிழக அரசியலில் ஆதரவு திரட்டும் படலம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.