தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர்தான் விஜய். இளைய தளபதி என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் விஜய்க்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. வசீகரமான ஸ்டைல், அசத்தலான நடிப்பு மற்றும் குழந்தைகளை ஈர்க்கும் காமெடி என சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடிகர் விஜய் அனைவரையும் ஈர்த்து வருகின்றார். இவருடைய நடிப்பில் அடுத்ததாக கோட் திரைப்படம் வெளியாக உள்ளது.

அதே சமயம் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியலிலும் விஜய் களமிறங்கியுள்ளார். இதனிடையே நடிகர் விஜய் 1999 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். விஜயின் தீவிர ரசிகையாக வந்த சங்கீதா பிறகு அவரையே திருமணம் செய்து கொண்டார். 1996 ஆம் ஆண்டு பூவே உனக்காக திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜயின் கேரியர் மாறிய சமயத்தில் சங்கீதா இங்கிலாந்தின் லண்டனில் இருந்து விஜயை சந்திக்க வந்துள்ளார்.

அப்போது சங்கீதாவின் அப்பாவித்தனம் மற்றும் நடத்தையால் ஈர்க்கப்பட்ட விஜய் தனது வீட்டிற்கு வரவழைத்து பெற்றோரிடம் அறிமுகப்படுத்தி பிறகு தங்கள் காதலை ஒப்புவித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு திருமணம் ஆகி 20 வருடங்களுக்கு மேலாகியுள்ள நிலையில் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது விஜய் மற்றும் சங்கீதாவின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
