நடிகர் மற்றும் தமிழக முதல்வர் விஜய் – சங்கீதா தம்பதியரின் விவாகரத்து வழக்கு தொடர்பாகச் சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாக, திமுகவின் ஜென்-இசட் (GenZ) ஒருங்கிணைப்பாளர் அன்பானந்தம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த தேன்கனிக்கோட்டை நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த வழக்குத் தொடர்பாக அன்பானந்தத்தை எப்போது வேண்டுமானாலும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைக்கலாம் என்றும், இனிவரும் காலங்களில் சமூக ஊடகங்களில் இதுபோன்ற அவதூறான தகவல்களை அவர் பதிவிடக் கூடாது என்றும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார். அத்துடன், அவரது சமூக வலைத்தளப் பக்கங்களை போலீஸார் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.
