“26 நிமிஷம் அமைதியா இருந்தோம்… ஆனா விஜய் செஞ்சது”…. சட்டசபையில் எ.வ.வேலு வீசிய அணுகுண்டு…. உச்சக்கட்ட பரபரப்பு….!

By Nanthini on புரட்டாதி 8, 2026

Spread the love

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தவெக மற்றும் திமுக உறுப்பினர்களுக்கிடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆகஸ்ட் 5 அன்று பொது பட்ஜெட்டும், ஆகஸ்ட் 6 அன்று வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றன. நேற்று காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்து உரையாற்றினார். 8 துறைகளின் மானியக் கோரிக்கைகளுடன் சட்டசபைக் கூட்டத் தொடர் நிறைவடையும் சூழலில், முதலமைச்சரின் பதிலுரை பேரவையில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

முதலமைச்சரின் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய திமுக கொறடா எ.வ.வேலு, சட்டமன்றப் பேரவைக்கென்று சில கண்ணியமான மரபுகளும் விதிகளும் உள்ளதாகச் சுட்டிக்காட்டினார். அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முன்னாள் முதலமைச்சர்கள் எவருமே துறை சார்ந்த மானியக் கோரிக்கைகளின் போது எல்லை மீறிப் பேசியதில்லை என்று குறிப்பிட்ட அவர், பேரவை விதி 92-ன் படி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து அவையில் பேச அனுமதியில்லை என்பதை நினைவூட்டினார். அமலாக்கத்துறை தொடுத்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கும் நிலையில், அதை அவையில் முதலமைச்சர் வாசித்தது பேரவை மரபை முற்றிலும் மீறிய செயல் என வேலு குற்றம் சாட்டினார்.

   

மேலும், ஜனநாயகத்தைக் காப்பதற்காக 450-க்கும் மேற்பட்டோர் சிறை சென்ற மிசா கால கொடுமைகள் குறித்தும், சர்க்காரியா கமிஷன் விவகாரம் குறித்தும் முதலமைச்சர் விஜய் தவறான தகவல்களைப் பதிவு செய்துள்ளதாக அவர் சாடினார். சர்க்காரியா கமிஷனில் சுமத்தப்பட்ட 28 குற்றச்சாட்டுகளுக்கும் எந்தவித ஆதாரமுமில்லை என்று கூறி கமிஷனே அதை முடித்து வைத்த வரலாற்று உண்மையைக் சுட்டிக்காட்டிய வேலு, பேரவையில் இல்லாத, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் பெயரைப் குறிப்பிட்டது பேரவை விதிகளுக்கு எதிரானது என்றும் வாதிட்டார்.

   

திரைத்துறையில் பயணித்த காலத்தில் முரசொலி மாறன் குடும்பத்தினருடன் மிக நெருங்கிய நட்பில் இருந்த முதலமைச்சர் விஜய், தற்போது அரசியல் தளத்தில் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஏமாற்றமளிப்பதாக அவர் வருத்தம் தெரிவித்தார். எனவே, மிசா போராட்டம் மற்றும் முரசொலி மாறன் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தெரிவித்த கருத்துகள் அனைத்தையும் அவைக் குறிப்பிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று சபாநாயகரை திமுக கொறடா எ.வ.வேலு வலியுறுத்தியுள்ளார்.