ஆதவ் அர்ஜுனாவின் ‘செக்-மேட்’.. சைலண்டாக ஒதுங்கிய விஜய்யின் ‘ரைட் ஹேண்ட்’…. தவெக-வில் நடக்கும் அதிகார யுத்தம்….!

Spread the love

தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்  தனது முதல் தேர்தலைச் சந்திக்கும் முன்பே உட்கட்சிப் பூசல்களைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, விஜய்யின் ‘வலது கை’ என்று கருதப்பட்ட தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமிக்கும், சமீபத்தில் கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜுனாவுக்கும் இடையே மூண்டுள்ள அதிகார மோதல் தற்போது பகிரங்கமாகத் தெரியத் தொடங்கியுள்ளது. கட்சியின் ஆரம்பக் கால ஆலோசனைகளை வழங்கி வந்த ஜான் ஆரோக்கியசாமி, தற்போது மெல்ல மெல்ல ஓரங்கட்டப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு கிளம்பியுள்ளது.

கட்சியின் கொள்கை முடிவுகள் முதல் நிர்வாகிகளின் பேட்டி வரை அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பிய ஜான் ஆரோக்கியசாமிக்கு, ஆதவ் அர்ஜுனாவின் வருகை பெரும் சவாலாக அமைந்துள்ளது. விஜய்யின் முழு நம்பிக்கையைப் பெற்றுள்ள ஆதவ் அர்ஜுனா, தற்போது கட்சியின் முக்கிய முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளார். தேர்தல் பணிகளுக்காக உருவாக்கப்பட்ட “வாய்ஸ் ஆப் காமன்ஸ்” அலுவலகத்தில் ஜானின் குழுவினர் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற விஜய்யின் விருப்பம் நிறைவேறாத நிலையில், அக்குழுவினர் அங்கிருந்து வெளியேறியது நிர்வாக ரீதியான பிளவை உறுதிப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஆதவ் அர்ஜுனா ஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்ட விருந்து நிகழ்ச்சியில் கட்சியின் முக்கியப் புள்ளிகள் அனைவரும் பங்கேற்ற நிலையில், ஜான் ஆரோக்கியசாமி மட்டும் அந்த நிகழ்வைத் தவிர்த்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜான் ஆரோக்கியசாமி தனது கட்டுப்பாட்டில் இல்லாத அதிகார மையத்தை விரும்பாததே இந்த விரிசலுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம், ஆதவ் அர்ஜுனாவின் தன்னிச்சையான செயல்பாடுகளும், மேடைப் பேச்சுகளும் விஜய்யை வெகுவாகக் கவர்ந்திருப்பது ஜானுக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

தற்போது நிலவும் சூழலைப் பார்க்கும்போது, ஜான் ஆரோக்கியசாமி விரைவில் தவெக முகாமிலிருந்து முழுமையாக விலக வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர். தேர்தல் நெருங்கும் வேளையில், கட்சியின் மிக முக்கியமான வியூக வகுப்பாளர் விலகுவது தவெகவின் வெற்றி வாய்ப்புகளைப் பாதிக்குமா என்ற கவலை தொண்டர்களிடையே எழுந்துள்ளது. விஜய்யின் இந்த அதிரடி மாற்றங்களும், நிர்வாகப் பகிர்வுகளும் வரும் சட்டமன்றத் தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Nanthini

Recent Posts

“5 முன்னாள் அமைச்சர்கள்!.. 15 எம்.எல்.ஏக்கள்”…. 200 பேருந்துகள், 7 மணி நேரப் பயணம்… அதிமுக காலி?… ஒரே நாளில் தவெக-வில் இணையும் 100 முக்கிய தலைவர்கள்… செம குஷியில் விஜய்…!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ளது தவெக. வெறும் ஆட்சிக்கட்டிலில் ஏறுவதோடு…

7 minutes ago

நீங்கதானே என்னை ஃபெயில் ஆக்குனீங்க?… ஆசிரியரின் வயிற்றில் கத்தியை இறக்கிய மாணவன்… பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாற்றுச் சான்றிதழ் வாங்குவது தொடர்பான தகராறில் 17 வயது…

12 minutes ago

தவெக எம்.எல்.ஏ-வுக்கு வலை வீசிய யூடியூபர்: நடுராத்திரியில் நடந்த அதிரடி கைது.. பின்னணியில் இருக்கும் அந்த ‘பெரிய கை’…. அலறும் அரசியல் வட்டாரம்….!

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரை மாற்றுப் கட்சிக்கு இழுக்க பேரம் பேசி மிரட்டிய புகாரில், பிரபல யூடியூபரான ஐபிடிஎஸ்…

14 minutes ago

“என் மனைவி, மகளை நானே கொன்றேன்”…. தலை சிதறி இறந்து கிடந்த சிறுமி… தொழிலதிபர் வெளியிட்ட பகீர் வீடியோ… தர்மபுரியில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்….!

தர்மபுரியில் கடன் சுமை காரணமாக ரியல் எஸ்டேட் அதிபர் தனது மனைவி மற்றும் மகளைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தானும்…

26 minutes ago

அம்மாவின் ஆனந்தக் கண்ணீர்… வரலாற்று வெற்றிக்கு பின் மொராக்கோ வீரர் செய்த ‘அந்த’ ஒரு காரியம்… உருகும் இணையம்…!

2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில், நெதர்லாந்து அணிக்கு எதிரான விறுவிறுப்பான பெனால்டி ஷூட்-அவுட் சுற்றில் மொராக்கோ அணி…

26 minutes ago

“புருஷன் கூட இருக்கும் போதே இப்படியா?”…. பேருந்தில் புதுமணப் பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்… மதுபோதையில் எல்லை மீறிய வாலிபர்…. அடுத்து நடந்த அந்த ஒரு சம்பவம்…!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதுமணப் பெண்ணிற்கு நேர்ந்த பாலியல் தொல்லை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பு சம்பவம்…

30 minutes ago