தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சட்டசபையில் தனது அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பெரும்பான்மையை நிரூபித்து வெற்றிகரமாக ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டார். இந்த வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக 144 சட்டமன்ற உறுப்பினர்களும், எதிராக 22 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதன் மூலம் தமிழக சட்டப்பேரவையில் விஜய்யின் தலைமைக்கு வலுவான ஆதரவு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று, மாநிலத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான குறைந்தபட்ச இடங்களான 118-ஐ எட்டுவதற்கு 10 இடங்கள் குறைவாக இருந்தன. இந்தச் சூழலில் தான் தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாக தவெக தலைமையிலான ஆட்சி அமைய கூட்டணி கட்சிகள் முன்வந்தன.
திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் விஜய்யின் தவெக ஆட்சிக்குத் தங்களது ஆதரவை வழங்கின. இந்தக் கூட்டணிக் கட்சிகளின் 36 உறுப்பினர்களின் ஆதரவையும் சேர்த்து, மொத்த பலம் 144 ஆக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து, மெஜாரிட்டியை நிரூபித்த விஜய், தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று தனது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
தமிழகத்தில் கூட்டுறவு மற்றும் அரசு வங்கிகளில் பொதுமக்கள் பெற்றுள்ள நகைக்கடன்கள் குறித்த விவரங்களை தமிழக அரசு தீவிரமாகச் சேகரித்து வருவதாகத்…
நாக்பூரில் நள்ளிரவு நேரத்தில் அத்துமீறி பைக்குகளை தாறுமாறாக ஓட்டிச் சென்ற ஒரு கும்பல், தன் காரில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த…
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கிப் படித்து…
தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத வகையில் புதிய திருப்பங்களையும், பரபரப்பான விவாதங்களையும் சந்தித்து வருகிறது. சமீபத்திய தேர்தல்…
நவி மும்பை ஐரோலியில் உள்ள ரஜமாதா ஜிஜாவ் மாநகராட்சி மருத்துவமனையில், தவறான ஊசி செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் புகாரில் 8 மாத…
முன்னாள் அமைச்சரும், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகத்திற்கு உடனடியாக ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை உயர் நீதிமன்றம்…