“தூய சக்தி” தவெகவுக்கும் “தீய சக்தி” திமுகவுக்கும் தான் போட்டியே… அரசியல் வட்டாரத்தை அலறவிட்ட விஜய்…!!

By Soundarya on மார்கழி 18, 2025

Spread the love

ஈரோட்டில் இன்று  நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆவேசமான தேர்தல் பிரச்சாரத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் ஆளும் திமுக அரசைத் “தீய சக்தி” என்று குறிப்பிட்டுப் பேசினார்.  2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தூய சக்தியான தவெக-வுக்கும், தீய சக்தியான திமுக-வுக்கும் இடையிலான நேரடிப் போட்டி  என்று கூறினார்.

மேலும்  மக்களை “ஓசி” என்று கூறி இழிவுபடுத்துவதாகவும், வரிப்பணத்தைச் சலுகைகளாகக் கொடுத்துவிட்டு அதைத் தர்மம் போலக் காட்டுவதாகவும் திமுகவை அவர் கடுமையாகச் சாடினார். தமிழகத்தில் தற்போது பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும்  குற்றம் சாட்டினார்.