Connect with us

சர்ச்சையான கட்சி பெயருக்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு முக்கிய அறிக்கையை வெளியிட்ட TVK தலைவர்.. என்ன சொல்லிருக்காருனு பாருங்க.

CINEMA

சர்ச்சையான கட்சி பெயருக்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு முக்கிய அறிக்கையை வெளியிட்ட TVK தலைவர்.. என்ன சொல்லிருக்காருனு பாருங்க.

 

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக கொடி கட்டி பறப்பவர்  நடிகர் விஜய். இவர் அரசியலில் களமிறங்க உள்ளார் என்று தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில், அவர்  தனது கட்சி பெயரை ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயரிட்டு அறிக்கை ஒன்றை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

#image_title

   

அந்த அறிக்கையில் முக்கிய விஷயமாக ‘நடப்பு மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்த சட்டசபைத் தேர்தல் நடைபெறும் 2026ம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் போட்டியிடும். அரசியல் என்பது எனக்கு பொழுதுபோக்கு அல்ல, அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த பணிகளை, கட்சி வேலைகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்’ என கூறியிருந்தார். விஜய் சினிமாவை விட்டு விலகுவதாக கூறியிருந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் இந்த அறிக்கையில் மிகப்பெரும் சர்ச்சை ஒன்றும் கிளம்பியது. அதாவது, கட்சியின் பெயர் ‘தமிழக வெற்றி கழகம்’ அல்ல. இதில் எழுத்துப்பிழை உள்ளது. இந்த கட்சியின் பெயரில் ‘க்’ வர வேண்டும் என்று பலர் அறிவுறுத்திய நிலையில் அதை சேர்க்க விஜய் முடிவு செய்ததாக ஏற்கெனவே கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் சமூக வலைதளத்தில் ‘க்’ சேர்க்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகம் என பெயர் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#image_title

இந்நிலையில்  ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய பெயரில் அறிக்கை ஒன்று நேற்று வெளியாகியுள்ளது. அதில், ‘தமிழக வெற்றி கழக தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை பனையூர் தலைமை நிலைய செயலாளர் அலுவலகத்தில் நாளை அதாவது பிப்ரவரி 19ஆம் தேதி காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது.’ என்ற முக்கிய அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது. இதோ அந்த அறிக்கை…

Continue Reading
To Top