ஸ்கூலுக்கு பக்கத்துல ஒயின் ஷாப் இருக்கு.. அப்போ பசங்க எல்லாம்..? சர்ச்சைகளுக்கு தளபதி கொடுத்த பதிலடி..!!

By admin on கார்த்திகை 2, 2023

Spread the love

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ படம் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

   

அனிருத் இசையமைத்திருந்த லியோ படம் 12 நாட்களில் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து பெரும் சாதனை படைத்தது. இந்நிலையில் லியோ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற நான் ரெடி பாடல் பல்வேறு சர்ச்சையில் சிக்கியது. இந்த பாடலை தளபதி விஜய் பாடியுள்ளார்.

   

Actor Vijay

 

நேற்று சென்னையில் நடந்த லியோ வெற்றி விழாவில் பேசிய விஜய் சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்தார். அவர் கூறியதாவது, நான் ரெடி பாடலில் சில வரிகள் பிரச்சனை ஆனது. விரல் இடுக்குல தீபந்தம் என்ற வரி பிரச்சனை ஆனது. அது ஏன் சிகரெட் ஆக தான் இருக்க வேண்டுமா? பேனாவாக கூட இருக்கலாம். சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் என கூறினார். இதனையடுத்து பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் கூட தான் மது கடை இருக்கிறது.

Actor Vijay

அதுக்குன்னு டெய்லி இரண்டு ரவுண்டு அடிச்சிட்டா பள்ளிக்கு செல்கிறார்கள்? உங்களில் பல பேர் நேரம் காலம் பார்க்காமல் சக்தியை மீறி நல்லது செய்கிறீர்கள் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் பிற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் உதவி செய்வதை பார்த்து இருக்கிறேன் எதிர்காலத்தில் எங்கு நல்லது நடந்தாலும் அது நம்ம பசங்க செய்ததாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை என கூறினார்.