நாங்க ஏன் பிச்சை எடுக்கணும்….? அப்பா சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா….? மேடையில் விஜய பிரபாகரன் காரசார பேச்சு…!!

By admin on புரட்டாதி 16, 2023

Spread the love

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அனகாபுத்தூரில் தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்தின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி மேடையில் பேசினார்.

அவர் கூறியதாவது, தன்னை சின்ன பையன் என்று நினைக்க வேண்டாம். விஜயகாந்த் மகனால் என்ன செய்துவிட முடியும் என யாரும் கணக்கு போட்டு விட வேண்டாம் என கோபமாக பேசினார். கடந்த 2021-ஆம் ஆண்டு நாங்கள் தேர்தலில் தோல்வியுற்ற பிறகு ஒருவர் பேசாமல் பிச்சை எடுக்க வேண்டியதுதானே என கமெண்ட் செய்தார். அப்படி நாங்கள் பிச்சை எடுத்திருந்தால் எங்களிடம் இப்போது எவ்வளவு எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் இருந்திருப்பார்கள்.

   

   

தே.மு.தி.கவை தொடங்குவதற்கு முன்பு தங்களிடம் எவ்வளவு சொத்து இருந்தது தெரியுமா?. இப்போது தங்களிடம் எவ்வளவு சொத்து இருக்கிறது என்பதை வெளியிட தயார் என கூறினார். அரசியல் கட்சி தொடங்கியதன் மூலம் சொந்த சொத்தை விற்பனை செய்து செலவு செய்து வருவதை விஜய பிரபாகரன் சுட்டிக்காட்டி பேசினார்.

 

தேர்தல் கூட்டணி தொடர்பாக முன்கூட்டியே பேசினால் வேறு வழி இல்லாமல் ஓடி வருகிறார்கள் எனவும், கடைசியில் பேசினால் பேரம் பேசுகிறார்கள் எனவும் எங்களை விமர்சிக்கிறார்கள். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன்மானத்தோடு கட்சியை வழிநடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் விஜயகாந்த் வீட்டில் இருப்பதால் தேமுதிக தேய்ந்து விட்டதாக யாரும் நினைக்க வேண்டாம் எனவும், 100 வருடம் அல்ல 200 வருடம் அல்ல 500 வருடமானாலும் தேமுதிக இயங்கும் என கூறினார். நாங்கள் என்ன தவறு செய்து விட்டோம் என்றும் ஏன் தேமுதிகவை பற்றிய அவதூறுகளையும், விமர்சனங்களையும் மீடியாக்கள் முன்வைக்கிறது என விஜய பிரபாகரன் கோபத்தில் கொந்தளித்தார்.