2026 தேர்தல் கூட்டணி… சற்றுமுன் விஜய் கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

By Nanthini on கார்த்திகை 16, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் களம் தயாராகி வருகிறது. அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரம் என மும்முறமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. அதில் முக்கியமாக விஜய் வருகை, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், அதிமுகவில் ஏற்பட்ட பிரிவு ஆகியவை பரபரப்பாகவே உள்ளது. மற்ற கட்சியின் கூட்டணியை விட தமிழக வெற்றிக்கழகம் உடன் யார் கூட்டணி அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு தான் அதிகமாக உள்ளது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை நிராகரித்த விஜய் நால்வர் அணியுடன் கூட்டணி அமைப்பார் அல்லது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் விஜய்க்கு மிக முக்கிய என்பதால் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பார் என்ற பல வியூகங்கள் எழுந்தது.

இந்நிலையில் ராகுல் காந்தியுடன் விஜய் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று தமிழக வெற்றி கழகம் நிர்வாகி அருள்ராஜ் அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளார். ராகுலுடன் விஜய் பேசியதாக வெளியாகும் செய்தி வதந்தி என்று கூறிய அவர், இதை யாரும் நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் கூட்டணி தொடர்பாக விஜய் அனைத்து முடிவையும் எடுப்பார் என்றும் யாருடன் கூட்டணி என்பதில் (பாஜக மற்றும் திமுகவை தவிர) தெளிவாக உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.