தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தவெக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்து இரண்டு மாதங்களே நிறைவடைந்துள்ள நிலையில், தலைமைச் செயலக வட்டாரங்களில் பெரும் புயல் வீசத் தொடங்கியுள்ளது. அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த நான்கு அமைச்சர்கள் மனக்கசப்பிலும் அதிருப்தியிலும் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆட்சியில் தங்களுக்கு உரிய மரியாதையோ அல்லது நிர்வாக ரீதியான முக்கியத்துவமோ வழங்கப்படவில்லை என்பதே இந்த அதிகாரப் போட்டியின் மையப்புள்ளியாகப் பார்க்கப்படுகிறது.
அரசுத் திட்டங்கள், கொள்கை முடிவுகள் மற்றும் முக்கிய அதிகாரிகளின் நியமனங்கள் என அனைத்தும் முதலமைச்சர் விஜய்யின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், அவருக்கு நெருக்கமான சில உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதலிலுமே எடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இலாகா ரீதியான முடிவுகளை எடுப்பதில் கூட தங்களைக் கலந்தாலோசிப்பதில்லை என்றும், வெறும் பெயரளவிலேயே அமைச்சர்களாகத் தொடர்வதாகவும் உணரும் கூட்டணி அமைச்சர்கள், இந்தச் சூழல் குறித்து முதலமைச்சரிடம் நேரடியாக முறையிட முடிவெடுத்துள்ளனர்.
இருப்பினும், நிலவும் சூழலுக்குத் தீர்வு காண முதலமைச்சரை நேரில் சந்திக்க பலமுறை நேரம் கோரப்பட்டும், முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. சந்திப்பிற்கான நேரம் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவது, கூட்டணி அமைச்சர்களிடையேயான மன உளைச்சலையும் ஆதங்கத்தையும் மேலும் அதிகரித்துள்ளது. “அரசு அதிகார அமைப்பில் எங்களின் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை” என அவர்கள் தங்களது ஆதரவாளர்களிடம் புலம்பி வருவதாகத் தெரிகிறது.
அடுத்தகட்ட நடவடிக்கையாக, முதலமைச்சர் அலுவலகத்தின் இந்த அணுகுமுறை குறித்துத் தங்களது கட்சித் தலைமைகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று முறையிட அந்த அமைச்சர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆட்சி அமைக்கப்பட்ட தொடக்கக் காலத்தில் நிலவிய இணக்கமான சூழல் தற்போது முற்றிலும் மாறிவிட்ட நிலையில், இந்த அதிகார மோதல் விஜய் தலைமையிலான கூட்டணிக்குள் பெரும் விரிசலை ஏற்படுத்துமோ என்ற கேள்வி அரசியல் விமர்சகர்களிடையே வலுத்துவருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…
சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (38). இவருக்கும் முத்து பிரியாவுக்கும் (33) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…
கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியைச் சேர்ந்த 38 வயதுப் பெண்ணான ரேகா, தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக…
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியாவிற்கும் தற்போதைய நவீன இந்தியாவிற்கும் இடையே…
பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…
அமெரிக்க இடைக்காலத் (மிட் டேர்ம்) தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி அடைந்த பெரும் தோல்வி, அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அரசியல்…