EXCLUSIVE: விஜய் குற்றவாளி இல்லை… சிபிஐ அனுப்பிய சம்மனில் ட்விஸ்ட்… கசிந்தது முக்கிய தகவல்…!

By Nanthini on தை 11, 2026

Spread the love

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு விஜய் ஆஜராக உள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் இன்று அவர் டெல்லி செல்ல உள்ளதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் நாளை காலை 7:00 மணிக்கு அவர் புறப்பட இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வழக்கு தொடர்பாக அனுப்பப்பட்ட சம்மனுக்கு சிபிஐ அதிகாரிகளிடம் விஜய் விளக்கம் அளிக்க உள்ளார்.

இந்நிலையில் கரூர் விவகாரத்தில் விஜய்க்கு அனுப்பப்பட்ட சிபிஐயின் சம்மன் குறித்த முக்கிய தகவல் கசிந்துள்ளது. விஜய்க்கு BNSS 179 பிரிவின் கீழ் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதாவது விஜய் குற்றம் செய்த நபர் இல்லை. ஆனால் குற்றம் நடந்த விதம், குற்றம் தொடர்பான தகவல் விஜய்க்கு தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அனுப்பப்பட்டுள்ளது. அதனால் அவர் நீதிமன்றத்தை நாடாமல் நாளை காலை விசாரணையை எதிர்கொள்ள உள்ளாராம்.