இயக்குனர் பிரபு தேவா இயக்கத்தில் நடிகர் விஜய், அசின் மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் போக்கிரி. இந்த திரைப்படம் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு பாடல்களும் செம ஹிட் ஆகி இளைஞர்களை துல்லாட்டம் போட வைத்தது. இளைஞர்களை அதிகம் ஈர்த்த சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்த படத்தில் வெள்ளி கதாபாத்திரத்தில் நடித்த இளசுகளின் மனதை கொள்ளை அடித்தவர் தான் நடிகை பிருந்தா பரோக். இந்த படத்தில் மோனா என்ற கதாபாத்திரத்தில் கிளாமர் வில்லியாக நடித்து இளைஞர்களை ஈர்த்தார்.
அதனைப் போலவே இந்த படத்தில் இவர் சொல்லும் டயலாக் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. அதுதான் கை விளையாடுது என விஜய்யை பார்த்து சொல்வார். அந்த டயலாக் செம பாப்புலர் ஆனது. போக்கிரி திரைப்படத்தின் மூலம் இளைஞர்களை ஈர்த்திருந்தாலும் இவர் ஏற்கனவே சிம்பு திரைப்படத்தில் நடித்துள்ளார். அதாவது சிம்பு மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான மன்மதன் திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைப் போலவே விஜயகாந்தின் சுதேசி, தனுஷின் பொல்லாதவன், குரு என் ஆளு மற்றும் சில்லுனு ஒரு சந்திப்பு உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கு என பழமொழி திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக இந்தியில் அதிக திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இப்படி பல மொழி படங்களில் கிளாமர் நடிகையாக வலம் வந்த இவர் திருமணம் வாழ்க்கைக்குள் ஐக்கியமாகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு கணவர் மற்றும் குழந்தை என குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்து விட்டார்.
இறுதியாக இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தி படத்தில் நடித்த தனது திரை வாழ்க்கைக்கு எண்டு கார்டு போட்டுவிட்டார். சினிமாவில் இல்லாவிட்டாலும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது பிருந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வராதனை பார்த்து ரசிகர்கள் விஜயின் போக்கிரி பட வில்லி நடிகையா இது என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…