தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் முழு வீச்சில் தயாராகின்றது. இதற்காக மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை கொண்ட நிர்வாக குழுவை விஜய் அமைத்துள்ளார். இந்த குழுவில் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், மாநில நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மற்றும் அருள்ராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் மாவட்ட அளவில் நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு கட்சி தொடர்பான தகவல்களை சேகரித்து விஜய்க்கு வழங்குகிறார்கள். இதனிடையே கட்சிக்கு தேர்தல் சின்னப் பெரும் நடவடிக்கை தீவிர படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தை தமிழக வெற்றி கழகம் கட்சி அணுகியுள்ளது. இமெயில் மூலமாக அதற்கான விண்ணப்ப படிவம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்நிலையில் நிர்வாக குழு நிர்வாகிகளை கொண்டு விஜய்யின் நேரடி கண்காணிப்பில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக உடனுக்குடன் கட்சி நிர்வாகிகளின் அன்றாட செயல்பாடுகளை விஜய் கண்காணித்து வருகின்றார். நீங்க சுமார் 100 பேர் பணியமர்த்தப்பட்டுள்ள நிலையில் பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இதற்கான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டசபை தொகுதிகளில் நிலவும் மக்கள் பிரச்சனை,மற்ற கட்சிகளின் செயல்பாடுகள் மற்றும் மக்கள் கருத்துக்களை இந்த கண்காணிப்பு கட்டளை அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர் போராட்டங்களை நடத்த நிர்வாகிகளுக்கும் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…
இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…