விஜய் மில்டன் ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் தமிழ் திரையுலகில் வேலை பார்த்துள்ளார். பிரியமுடன், நெஞ்சினிலே, காதலுடன், ஆட்டோகிராப் உள்ளிட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக வேலை பார்த்துள்ளார். கடந்த 2006-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு கோலி சோடா, பத்து என்றதுக்குள்ள, கடுகு ஆகிய திரைப்படங்களை இயற்றினார்.

கடைசியாக விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் கோலி சோடா ரைசிங் வெப் சீரிசையும் விஜய் மில்டன் இயக்கினார். இந்த சீரியஸில் குக் வித் கோமாளி புகழ் வில்லனாக நடித்துள்ளார். சமீபத்தில் விஜய் மில்டன் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, எனக்கு குக் வித் கோமாளி புகழ் யாருன்னு தெரியாது. அவர் ஒரு சில படங்களில் காமெடி கேரக்டர்ல வந்தாரு.

அதுக்கப்புறம் யாருன்னு விசாரிச்ச போது குக் வித் கோமாளி புகழ் அப்படின்னு சொன்னாங்க. நான் அந்த ப்ரோக்ராம் பார்த்தது கிடையாது. என் பையன் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பாப்பான். அவனுக்கு புகழ் ரொம்ப பிடிக்கும். ஒரு நாள் தற்செயலா டிவிய கிராஸ் பண்ணி போகும்போது புகழ் ஒரு கைல புஷ் அப் எடுத்துட்டு இருந்தாரு. கோலி சோடா ரைசிங் படத்துல உருண்டை கேரக்டருக்கு நிறைய பேரை வைத்து பேசிட்டு இருந்தோம். அப்போ நான் புகழ் நடிச்சா சரியா இருக்கும்னு சொன்னேன். அதைக் கேட்ட உடனே அசிஸ்டன்ட் எல்லாருமே சிரிச்சிட்டாங்க.

நீங்க காமெடி பண்ணாதீங்க இது பயங்கர கெட்ட பேரு தான் வரும். இது தேவையே இல்ல. அது ஒரு பயங்கரமான கேரக்டர். ஹார்பர் ரவிக்கு எதிராக நிற்கிற ஒரு கேரக்டர். அப்படி இருக்கும்போது டம்மியா ஒரு ஆளை போட்டா நல்லா இருக்காது. அதுவும் நீங்க சொல்ற சாய்ஸ் சரியாகவே இருக்காது அப்படின்னு சொன்னாங்க. எனக்கு யாராவது ஒருத்தங்க அதை செய்யாதே என்று சொன்னால் செய்யவேண்டும் என்று தோணும். அதனாலயே புகழ கூட்டு கதைய சொன்னேன். நம்ம என்ன சொல்றோமோ அடுத்த செகண்ட் அவருக்கு புரியுது. அவரோட நடிப்பு பயங்கரமா இருந்துச்சு என கூறியுள்ளார்.
