லியோ திரைப்படம் LCU-வில் இருக்கா?… இல்லையா?… ஒரு வழியாக வெளிவந்த உண்மை…. செம குஷியில் ரசிகர்கள்…!!!

By Mahalakshmi on ஐப்பசி 19, 2023

Spread the love

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கின்றது. தமிழகத்தில் ஒன்பது மணிக்கு தான் முதல் காட்சி. ஆனால் கேரளா ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு லியோ திரைப்படம் வெளியாகிவிட்டது. லியோ திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை கூறி வருகிறார்கள்.

   

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே ப்ரீ புக்கிங்கில் பல கோடி சாதனை படைத்துள்ளது. தமிழில் உருவாகி இருக்கும் இப்படத்தை இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்து பான் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் செய்து உள்ளனர்.

   

 

அதிலும் தமிழ்நாட்டில் விஜய் திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பாக இருந்தது லியோ திரைப்படம் எல்சியு-வா இல்லையா என்பதுதான். அதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. இது எல்சியு என உறுதியாகி உள்ளது. கைதி படத்திற்கு பின் வரும் கதையை வைத்து தான் இந்த திரைப்படம் உருவாகி இருக்கின்றது என்று பலரும் தெரிவித்திருக்கிறார்கள்.