கரூர் பிரச்சாரத்தில் 36 பேர் பலி…! கனத்த இதயத்துடன் பதில் கூறாமல் சென்னைக்கு புறப்பட்ட விஜய்…. வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 27, 2025

Spread the love

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சனிக்கிழமைகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று மதியம் நாமக்கல்லுக்கு சென்ற விஜய் அங்கிருந்து 7 மணிக்கு கரூருக்கு புறப்பட்டார். அவர் மதியம் 12 மணிக்கு கரூருக்கு வருவார் என கூறப்பட்டதால் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். ஆனால் இரவு 7.30 மணி அளவில் விஜய் கரூருக்கு வந்தார். அவர் பேசிக் கொண்டிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள், 16 பெண்கள், 9 ஆண்கள் என 36 பேர் உயிரிழந்தனர்.

ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூரிலிருந்து தனது பிரச்சார வாகனத்தில் புறப்பட்ட விஜய் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால் எந்த பதிலும் கூறாமல் விஜய் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.