ஆண்டவர் கமலை சந்தித்த தளபதி விஜய்.. என்னவா இருக்கும்..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..

By admin on கார்த்திகை 8, 2023

Spread the love

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ படம் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே பல்வேறு எதிர்ப்புகளும், எதிர்பார்ப்புகளும் நிலவி வந்தது. படத்தின் நான் ரெடி பாடல் வெளியானது முதல் ட்ரெய்லர் வெளியானது வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது.

   

அப்படி இருக்க ஜெயிலர் படத்தின் வசூலை லியோ படம் முறியடிக்குமா என நெட்டிசன்கள் விவாதித்துக் கொண்டிருந்தனர். லியோ படத்தில் சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்தது மேலும் எதிர்பார்ப்பைக் கூட்டியது. இந்த படத்தில் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

   

 

இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இந்நிலையில் லியோ தயாரிப்பு நிறுவனம் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதாவது 12 நாட்களில் லியோ படம் 540 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. ஜெயிலர் படம் 525 கோடி வசூல் செய்த நிலையில் லியோ திரைப்படம் 540 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

முதல் நாளில் 148 கோடி ரூபாய் வசூல் செய்த லியோ முதல் வாரத்தில் 461 வசூல் செய்தது. தற்போது 12 நாட்களில் 540 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் லியோ படத்தில் ஒரு சில காட்சிகளுக்கு கமல்ஹாசன் டப்பிங் கொடுத்துள்ளார். அப்போது கமல்ஹாசனும் விஜய்யும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
தற்போது சோசியல் மீடியாவில் வெளியான அந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.