Connect with us

த.வெ.க தலைவர் விஜயின் கல்வி விருது விழா.. விதவிதமாக தயாராகும் மதிய உணவு.. லிஸ்ட் இதோ..!

CINEMA

த.வெ.க தலைவர் விஜயின் கல்வி விருது விழா.. விதவிதமாக தயாராகும் மதிய உணவு.. லிஸ்ட் இதோ..!

 

நடிகர் விஜய் தலைமையில் நடைபெற இருக்கும் கல்வி விருது விழாவில் வழங்கும் மதிய உணவு பட்டியல் தொடர்பான தகவல் வெளியாகியிருக்கின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். சினிமாவில் பிஸியாக நடித்து வரும் விஜய் அரசியலிலும் குதித்து இருக்கின்றார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கின்றார். இந்த கட்சியின் தலைவராக பொறுப்பு வகிக்கும் நடிகர் விஜய் வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கின்றார். இது தமிழக மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருந்தது.

   

இதனால் சினிமாவில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெறுவதற்கு முடிவு எடுத்திருக்கும் நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 69 என்கின்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இந்த திரைப்படத்தை யார் இயக்குகிறார் என்கிறது தொடர்பான தகவல் இப்போது வரை வெளியாகவில்லை. இப்படத்தை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகி முழு நேரமும் அரசியலில் ஈடுபட உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் கடந்த வருடமும் 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் வாங்கிய மாணவர்களுக்கு தொகுதி வாரியாக ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்திருந்தார். அதேபோல இந்த வருடம் இரண்டாவது ஆண்டு கல்வி விருது வழங்கும் விழா சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்ட்ரில் இன்று நடைபெற உள்ளது.

இதில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 234 தொகுதிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை அழைத்து பாராட்டு விழா நடத்த இருக்கின்றார். அதில் சான்றிதழும், 5000 ரூபாய் ஊக்க தொகையும் வழங்கி இருக்கின்றார். இரண்டு கட்டமாக நடைபெறும் இந்த விழாவில் முதல் கட்டமாக இன்றும் அடுத்ததாக ஜூலை இரண்டாம் தேதியும் விருது விழா நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை 9:30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்க இருக்கும் நிலையில் நடிகர் விஜய் 6 மணிக்கே விலா நடைபெறும் இடத்திற்கு வந்து விட்டார். மேலும் மாணவர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அவர்களுக்கு வழங்கும் மதிய உணவு பட்டியல் தொடர்பான தகவல் வெளியாகியிருக்கின்றது.

அதன்படி கல்வி விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்கு சாதம், வடை, அப்பளம், அவியல், மோர், வெற்றிலை பாயாசம், இஞ்சி துவையல், தயிர் பச்சடி, அவரை மணிலா பொறியியல், உருளைக்க காரக்கறி, ஆனியன் மணிலா, வத்த குழம்பு, சாம்பார், தக்காளி ரசம் போன்ற உணவுகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top