“தமிழக அரசியலை புரட்டிப் போடப்போகும் புதிய கூட்டணி”.. விஜய்யின் முடிவால் திணறும் அறிவாலயம்…!

By Nanthini on தை 14, 2026

Spread the love

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகள் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் பாஜக மேலிடத்தைச் சந்தித்துப் பேசிய இபிஎஸ், தற்போது பாஜக மற்றும் பாமகவுடன் மெகா கூட்டணியை உறுதி செய்துள்ளார். இந்த நிலையில், திமுக எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்க விஜய்யின் தவெக-வையும் இந்த கூட்டணியில் இணைக்க டெல்லி தரப்பிலிருந்து சிக்னல் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகம் இதுவரை தனித்துப் போட்டி என்று கூறி வந்தாலும், அதிமுக-வின் முக்கிய நிர்வாகிகள் விஜய்யுடன் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் அதிமுக-விலிருந்து விலகி விஜய்யின் கட்சியில் இணைந்த ஜே.சி.டி பிரபாகரன் போன்றவர்களின் வருகை, இரு கட்சிகளுக்கும் இடையே ஒரு பாலத்தை உருவாக்கியுள்ளது. மேலும், “திமுக-வை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்” என்ற டெல்லியின் விருப்பத்திற்கு இபிஎஸ் பச்சைக்கொடி காட்டியுள்ளதால், விஜய்யின் வருகை உறுதி செய்யப்பட்டால் அது தங்களுக்குப் பெரும் பலமாக அமையும் என அவர் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாகத் தெரிகிறது.

   

இருப்பினும், தவெக தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. விஜய் தனது மாநாடுகளில் திமுக-வை அரசியல் எதிரியாகவும், பாஜக-வை கொள்கை எதிரியாகவும் விமர்சித்துள்ளதால், பாஜக இருக்கும் கூட்டணியில் அவர் இணைவாரா என்ற கேள்வியும் ஒருபுறம் எழுகிறது. ஆனால், அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்ற அடிப்படையில், ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் திட்டத்துடன் அதிமுக – தவெக கூட்டணி அமைந்தால், அது 2026 தேர்தலில் ஆளும் திமுக-விற்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.