அடுத்த அதிரடி…. இனி யாரும் TVK காரன் மேல கை வைக்க முடியாது… தொண்டர் பாதுகாப்புக்காக விஜய் எடுத்த அதிரடி முடிவு…!

Spread the love

கரூரில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடத்திய பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த சம்பவம் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு பெரிய அவமரியாதையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதனிடையே கட்சியின் மீதான அவப்பெயரை மாற்றும் முயற்சியில் கட்சித் தலைவர் விஜய், தீவிரமாக களமிறங்கியுள்ளார். இதற்காக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து வரும் விஜய் முதல் கட்டமாக தொண்டர் பாதுகாப்பு படையை உருவாக்க முடிவு செய்துள்ளாராம்.

தொண்டர் பாதுகாப்பு படையானது கட்சி சார்பாக நடைபெறும் பெரிய கூட்டங்கள், கட்சி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது, நிகழ்ச்சியின் போது தொண்டர்களுக்கு தேவைப்படும் வசதிகளை செய்து கொடுப்பது மற்றும் தொண்டர்களை பாதுகாப்பாக வழிநடத்துவது உள்ளிட்ட பணிகளில் இவர்கள் ஈடுபடுவார்கள். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக தெரிகிறது. அப்படி தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு கட்சி சார்பாக முறையாக பயிற்சி வழங்கப்பட்டு அவர்கள் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் தங்கள் பணியை மேற்கொள்வார்கள் என தெரிகிறது.

அதேசமயம் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் கைது நடவடிக்கை காரணமாக தலைமறைவாக இருக்கும் நிலையில் ஆதவ் அர்ஜுனா டெல்லி சென்றுள்ளார். இதனால் கட்சி பணிகள் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே உள்ளது. இதன் காரணமாக கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்கும் முயற்சியில் விஜய் ஈடுபட்டுள்ளார்.

Nanthini

Recent Posts

திமுக கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேறிய வைகோ…. திருச்சியில் நடுத்தெருவில் திமுகவினர் செய்த காரியம்… தமிழக அரசியலில் பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வாக, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ…

34 minutes ago

“உங்களை கையெடுத்து கும்பிடுறேன்… மனுஷன் உயிர் வேற”… பாக்யராஜ் உடலுக்கு முன்னால் கைகூப்பி கதறிய ராதிகா சரத்குமார்… கலங்க வைத்த அந்த ஒரு சம்பவம்..!

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநரும், நடிகருமான ‘திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் திடீர் மாரடைப்பால் காலமான செய்தி ஒட்டுமொத்தத் திரையுலகையும்,…

39 minutes ago

ரூ.1 கோடி வசூல் யாரும் எதிர்பாராத சாதனை…! ரஜினி, கமல் படங்களை ஓரம் கட்டிய பாக்யராஜின் ‘அந்த’ படம் எது தெரியுமா…?

தமிழ் திரையுலகில் திரைக்கதை அமைப்பதில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி, 'திரைக்கதை மன்னன்' என்று போற்றப்பட்டவர் இயக்குநர் கே.…

42 minutes ago

செல்வப்பெருந்தகையின் பதவி பறிப்பு…. தமிழ்நாடு காங்கிரஸின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த புதிய நியமனம் உடனடியாக அமலுக்கு…

44 minutes ago

“காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. அலறியடித்து ஓடிய பெண்”…. கண்ணிமைக்கும் நேரத்தில் சுற்றிய 10 குரங்குகள்… அடுத்த நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

சென்னை தாம்பரம் அருகே உள்ள கழுகுமலை உச்சியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவிலில், குரங்குகள் சூழ்ந்து கொண்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியிலும்…

54 minutes ago

தமிழக அரசியலில் அடுத்த வெடி! “த்ரிஷாவிற்கு துணை முதல்வர் பதவி…?” வாய்விட்டு மாட்டிக்கொண்ட முன்னாள் அமைச்சர்…!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் இந்த காரசாரமான விமர்சனம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக…

59 minutes ago