அவசரமாக களத்தில் இறக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா… திருமாவளவன், மாணிக்கம் தாகூருடன் அவசரப் பேச்சுவார்த்தை…. இரவு நேர ரகசிய அறிக்கை… திடீரென அப்செட்டான முதல்வர் விஜய்….!

Spread the love

தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்தைத் தொடங்கி வைத்த மனநிறைவில் இருந்த தமிழக முதல்வர் விஜய்க்கு, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் தொடர்பான உளவுத்துறை மற்றும் தேர்தல் கள நிலவரங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தவெக தலைமையிலான கூட்டணி அரசில் அங்கங்கம் வகிக்கும் காங்கிரஸ், விசிக, ஐ.யூ.எம்.எல் போன்ற கட்சிகள் இடைத்தேர்தலிலும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதால் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்த விஜய்க்கு, நேற்று இரவு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை அப்-செட்டை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மட்டத்தில் இணக்கம் இருந்தாலும், தொகுதி மற்றும் கிராம அளவில் தவெக தொண்டர்களுக்கும் கூட்டணி கட்சித் தொண்டர்களுக்கும் இடையே கடுமையான சுணக்கமும் அதிருப்தியும் நிலவுவது அந்த அறிக்கையில் அம்பலமாகியுள்ளது.

இந்த விரிசலுக்கு பிரதான காரணமாகத் தேர்தல் செலவினங்களுக்கான நிதிப் பகிர்வு அமையப்பெற்றுள்ளது. தவெக தலைமைத் தரப்பிலிருந்து தேர்தல் செலவுகளுக்குப் போதுமான நிதி வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை கூட்டணி கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் முன்வைக்கின்றனர். இதுகுறித்து தவெக வேட்பாளர்களிடம் முறையிட்டபோது, “தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களிடம் பேசுங்கள்” என அவர்கள் கைவிரித்து விட்டனர். ஆனால், பொறுப்பு அமைச்சர்களோ, “உங்கள் கட்சிதான் அமைச்சரவையில் இருக்கிறதே, உங்கள் கட்சி அமைச்சர்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள்” எனச் சிரித்தபடியே கூலாகப் பதிலளித்து அனுப்பிவிடுவதாகத் தெரிகிறது. இதனால் அதிருப்தியடைந்த காங்கிரஸ் மற்றும் விசிக தொண்டர்கள் தேர்தல் களப்பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கி நிற்பது தவெகவிற்குப் பின்னடைவை உருவாக்கியுள்ளது.

மற்றொருபுறம், தாராபுரம் தொகுதியின் கள நிலவரம் தவெகவிற்கு மேலும் நெருக்கடியைக் கூட்டியுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சில நாட்களிலேயே, தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த சத்யபாமாவுக்கு எதிராக மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். “எங்கள் விரலில் வைத்த மை கூட காய்வதற்குள், எங்களைக் கேட்காமல் ஏன் பதவியை ராஜினாமா செய்தீர்கள்?” என கிராமப்புற வாக்காளர்கள் அவரை நேருக்கு நேர் நிறுத்திக் கேள்வி எழுப்புகின்றனர். பிரச்சாரத்திற்குச் செல்லும் இடங்களில் எல்லாம் “துரோகி” என்ற முழக்கங்கள் எதிரொலிப்பது, வெறும் மாற்றுக் கட்சியினரின் எதிர்ப்பாக மட்டுமில்லாமல் நடுநிலை வாக்காளர்களின் நேரடிக் கோபமாகவும் உருவெடுத்துள்ளது.

கீழ்மட்டத்தில் நிலவும் இந்தத் தேர்தல் கலவரத்தையும் கூட்டணி முரண்பாடுகளையும் உடனடியாகச் சரிசெய்ய முதல்வர் விஜய் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளார். காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரிடம் பேசி நிலமையைச் சீரமைக்குமாறு தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு உத்தரவிட்டுள்ளார். எனினும், வேட்பாளர் மீதான மக்களின் கோபமும் கூட்டணி தொண்டர்களின் தேர்தல் பணிக் சுணக்கமும் இடைத்தேர்தல் களத்தில் தவெகவிற்கு எதிரான பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

Nanthini

Recent Posts

அம்மாடியோ… இந்த காலத்துல இப்படி ஒரு மருமகளா?… நடக்க முடியாத மாமனாரைத் தோளில் சுமந்து சென்ற பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!

நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…

6 மணத்தியாலங்கள் ago

இது பள்ளியா?… இல்ல சித்திரவதைக் கூடமா?… 3 வயது பிஞ்சுக் குழந்தையை… கயிற்றால் கட்டித் தாக்கிய ஆசிரியர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…

6 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… உயிருள்ள பாம்பைக் கழுத்தில் சுற்றி சாகசம்… பூஜையின் போது கடித்ததில் பிரபல… பாம்பு பிடிப்பவர் பரிதாப பலி…!

மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…

6 மணத்தியாலங்கள் ago

பலமுறை நடந்த கொடூரம்… வெளிவந்த உண்மை… சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்… நீதிமன்றம் எடுத்த முடிவு என்ன தெரியுமா?…!!

ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…

6 மணத்தியாலங்கள் ago

என் கணவனுடனா பழகுகிறாய்?… உன்னை உயிரோடு விடமாட்டேன்… ரூ 13 லட்சம் கூலிப்படையை ஏவி… தோழியைத் தீர்த்துக்கட்டிய மனைவியின் வெறிச்செயல்…!!

மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…

6 மணத்தியாலங்கள் ago

கடவுளே… கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா?… வீட்டு வாசல் சாக்கடைக்குள் விழுந்த வியாபாரி… காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்த பொதுமக்கள்… இணையத்தில் நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…

6 மணத்தியாலங்கள் ago