இண்டியா டூடே நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பில், அடுத்த பிரதமராக நரேந்திர மோடிக்கு 49% பேரும், ராகுல் காந்திக்கு 27% பேரும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு 9% பேர் ஆதரவளித்திருப்பது தேசிய மற்றும் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ‘இண்டியா’ கூட்டணியின் தலைமைப் பொறுப்பிற்கு ராகுல் காந்தி (29%) மற்றும் மம்தா பானர்ஜிக்கு (9%) இடையே விஜய்க்கு 12% ஆதரவு கிடைத்திருப்பது அரசியல் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வியப்பூட்டும் முடிவுகளைத் தொடர்ந்து, “விஜய் இனி முதலமைச்சர் வேட்பாளர் மட்டுமல்ல, பிரதமர் வேட்பாளர்” என்ற முழக்கத்துடன் தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புதிய டிரெண்டை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.
