தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். தவெக ஆட்சியைப் பிடித்துள்ள போதிலும், கட்சியின் அரசியல் பயணத்தில் மறக்க முடியாத ஒரு கரும்புள்ளியாக அமைந்தது கரூர் துயர சம்பவம்தான். கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடந்த விஜய்யின் தேர்தல் பரப்புரையின் போது, எதிர்பாராத விதமாகக் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் நடந்த அன்று இரவே விஜய் சென்னை திரும்பியதும், பாதிக்கப்பட்ட மக்களை உடனே நேரில் சந்திக்காததும் அரசியல் வட்டாரத்தில் அவர் மீது கடுமையான விமர்சனங்களை எழுப்பியது.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து, அவர்களின் கால்களில் விழுந்து விஜய் அப்போதே மன்னிப்புக் கோரியதாகத் தகவல்கள் வெளியாகின. இருப்பினும், அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு எப்போது கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்து வந்தது. தற்போது ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ள சூழலில், வரும் ஜூலை மாதம் (அடுத்த வாரம்) முதலமைச்சர் விஜய் கரூருக்கு நேரில் செல்லத் திட்டமிட்டுள்ளார் என்ற புதிய தகவல் தவெக தரப்பிலிருந்து வெளியாகியுள்ளது.
இந்த முதற்கட்டப் பயணத்தின் போது, உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களையும் விஜய் நேரடியாகச் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் தற்போது கரூரில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு திருச்சிக்கு அடுத்தபடியாக விஜய் செல்லும் முக்கிய மாவட்டப் பயணம் இதுவாகும். இந்தச் சந்திப்பின் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான கூடுதல் உதவிகளை வழங்குவதுடன், கரூரில் சில முக்கிய நலத்திட்ட உதவிகளையும் அவர் தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…