தமிழக அரசியலில் அதிமுக மற்றும் திமுக இடையே மட்டும் போட்டி நிலவி வந்த நிலையில் தற்போது தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டியின் நிலவுகிறது. விஜய் முதன்முதலில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருப்பதால் அவர் மீது அதிக அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் முடிவில்தான் விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் ஓட்டாக மாறுமா என்பது தெரியவரும். இப்படியான நிலையில் தமிழக வெற்றிக்கலகம் ஆளும் கட்சியாக இல்லாவிட்டாலும் எதிர்க்கட்சியாக வரும் வாய்ப்பு அதிக அளவில் உள்ளது என்ற கூட்டை உறுதிப்படுத்தும் வகையில் அரசியல் அனுபவம் வாய்ந்த நபர்கள் பலரும் விஜய் உடன் இணைந்து வருகிறார்கள்.
அதற்குப் பிள்ளையார் சுழி போடும் விதமாக செங்கோட்டையன் விஜயுடன் இணைந்தார். இதனைத் தொடர்ந்து கொங்கு மண்டலத்தை தமிழக வெற்றிக்கழகம் பக்கம் இருப்பதற்கான பணியை அவர் கையில் எடுத்துள்ளார். தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்த இவருக்கு நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் கொங்கு மண்டல பொறுப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. ஏற்கனவே இரண்டு பதவிகளை வகித்து வரும் செங்கோட்டையனுக்கு மூன்றாவதாக ஒரு பதவியை ஒதுக்குவதற்கு விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி ஈரோட்டில் நடைபெறும் பொது கூட்டத்தில் செங்கோட்டையனுக்கு தமிழக வெற்றி கழகம் கட்சியின் துணை முதல்வர் பதவியை அறிவிக்கப் போவதாக தகவல் கசிந்துள்ளது. இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் இது குறித்த பல்வேறு யூகங்கள் அரசியல் வட்டாரத்தில் பரவி வருகிறது. ஈரோடு செங்கோட்டையனின் கோட்டை என்பதால் இந்த இடத்தில் இதனை அறிவிப்பது தான் சரியாக இருக்கும் என விஜய் கருதுவதாகவும் கூறப்படுகிறது.
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு முறை போட்டியாளராகப் பங்கேற்ற நடிகை ஹரிதேஜா, அண்மையில் அளித்த பேட்டியொன்றில் தனக்கு ஏற்பட்ட கசப்பான…
சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்ய களம் இறங்கியபோது, அவருக்குக் குழந்தை பிறந்த மகிழ்ச்சியான செய்திக்காக விராட் கோலி முதலில் தனது…
ராய்ப்பூரில் நடைபெற்ற இந்தத் திரில் வெற்றிக்குப் பிறகு, ஆர்சிபி வீரர் குருணால் பாண்டியா தனது பழைய அணியான மும்பை இந்தியன்ஸின்…
கொங்கு மண்டல அரசியலில் பெரும் அதிரடியாக, திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்…
ராய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் 2026 லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடைசி…
2026 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சந்தித்த படுதோல்வி, அக்கட்சிக்குள் நீண்டகாலமாக புகைந்து கொண்டிருந்த அதிருப்தியை தற்போது எரிமலையாக வெடிக்கச்…