தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் நேற்று உற்சாகத்துடன் தொடங்கியது. கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆர்வமுடன் மனுக்களைப் பெற்று வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் எங்கு போட்டியிடுவார் என்பதே தற்போது தமிழக அரசியலின் ஹாட் டாபிக். குறிப்பாக, விஜய் தனது கட்சியின் முதல் தேர்தலிலேயே இரண்டு தொகுதிகளில் களம் காணத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
தலைவர் விஜய் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அந்தந்தப் பகுதி நிர்வாகிகள் போட்டி போட்டுக்கொண்டு விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி, அவர் வட தமிழகத்தில் ஒரு தொகுதியையும், மத்திய தமிழகத்தில் ஒரு தொகுதியையும் தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, சென்னையின் முக்கிய தொகுதிகளான விருகம்பாக்கம் அல்லது வேளச்சேரி ஆகியவற்றில் ஒன்றையும், டெல்டா பகுதியின் மையப்புள்ளியான திருச்சி கிழக்கு தொகுதியையும் அவர் குறிவைத்துள்ளதாகத் தெரிகிறது. இந்த இருமுனைப் போட்டி வியூகம், கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, மற்ற அரசியல் கட்சிகளையும் உன்னிப்பாகக் கவனிக்க வைத்துள்ளது.
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே திமுக மற்றும் தவெக இடையேயான அரசியல் மோதல் நாளுக்கு நாள்…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மாநிலத்தின் அரசியல் களம் முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது. குறிப்பாக, பல தசாப்தங்களாக தமிழக…
தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, தீவிர அதிமுக ஆதரவாளராக இருந்து கடந்த தேர்தல்களில் அக்கட்சிக்காகத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட…
திமுகவின் மூத்த தலைவரும் எம்பியுமான ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது…
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் (பொறுப்பு) ராஜேந்திர அர்லேகரை…
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் என்றாலே உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மட்டுமின்றி, பல்வேறு துறை பிரபலங்களும் நேரில் சென்று…