2026 தேர்தலில் மிகப்பெரிய ட்விஸ்ட்… “முடிவு எடுத்தாச்சு.. இனி பின்வாங்க முடியாது” – பாமக-வுக்கு செக் வைத்த திமுக….!

Spread the love

பாமகவுடன் கூட்டணி இல்லை என்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முடிவு, வன்னியர் சமூகத்திற்கு எதிரானது அல்ல என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாகத் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பாஜக மற்றும் பாமக ஆகிய கட்சிகளுடன் தேர்தல் உறவு இல்லை என்ற கட்சியின் உறுதியான நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். சனாதன அரசியலின் சதியை முறியடிக்க வேண்டிய வரலாற்றுத் தேவையால் திமுக தலைமையிலான கூட்டணியில் நீடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு திமுக கூட்டணியில் பாமகவும் விசிகவும் இணைந்து போட்டியிட்டபோது ஏற்பட்ட தோல்வியையும், அதன் பிறகு பாமக முன்னெடுத்த ‘சாதி ரீதியான பிளவு அரசியல்’ உத்திகளையும் திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய பிளவுவாத அரசியலை எதிர்த்தே, பாஜக மற்றும் பாமகவுடன் இனி தேர்தல் கூட்டணி கிடையாது என்ற முடிவை 14 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்ததாக அவர் நினைவு கூர்ந்துள்ளார். கொள்கை அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த முடிவைச் சமூக மோதலாகச் சித்தரிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தனிப்பட்ட முறையில் எந்தவொரு நபர் மீதோ அல்லது அரசியல் கட்சி மீதோ தமக்குக் காழ்ப்புணர்ச்சி கிடையாது என்றும், பாமகவின் அரசியல் செயல்பாடுகள் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் திருமாவளவன் விளக்கியுள்ளார். பாமகவை எதிர்ப்பதை வன்னியர் சமூகத்திற்கு எதிரானதாகச் சித்தரிக்கச் சிலர் முயற்சிப்பதாகவும், அதேபோல் பாஜகவை விமர்சிப்பதை இந்துக்களுக்கு எதிரானதாகச் சனாதன சக்திகள் திரிப்பதாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். விசிக எந்த ஒரு சாதிக்கோ அல்லது மதத்திற்கோ எதிரானது அல்ல என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சனாதன மற்றும் பாசிச சக்திகளை வீழ்த்துவதே விசிகவின் முதன்மை இலக்கு என்று கூறியுள்ள அவர், அதற்காகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு விசிக முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் உறுதி அளித்துள்ளார். மேலும், கட்சியின் தொண்டர்கள் தேவையற்ற அவதூறுகளுக்கும் திரிபுவாதங்களுக்கும் இடம் தராத வகையில் நாகரிகமான கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியின் வெற்றிக்காகத் தொடர்ந்து பாடுபடப் போவதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Nanthini

Recent Posts

வெளியே சிரித்த முகம்… உள்ளே ரத்த வெறி… சமூக வலைதள பிரபலம் நிஷாவின் கொலையில் வெளியான பகீர் பின்னணி…!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில், சொத்து தகராறு காரணமாக சமூக வலைதள பிரபலமும் அழகுக்கலை நிபுணருமான நிஷா சவுகான்…

4 minutes ago

சந்தேகப் பேய்க்கு பலியான 3 உயிர்கள்… 4 மாத கர்ப்பிணியை அடித்துக் கொன்ற கணவனின் வெறிச்செயல்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

திருப்பூர் ஊத்துக்குளி சாலை, கருமாரபாளையம் அருகேயுள்ள மூகாம்பிகை நகர் பகுதியில், காதலித்து கரம் பிடித்த மனைவியை கணவனே அடித்துக் கொலை…

15 minutes ago

ஓட்டுநரின் கழுத்தைப் பிடித்த பயணி… 40 உயிர்களைப் பலிவாங்கிய பேருந்து விபத்தின் பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மை…!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்துள்ள கோர பேருந்து விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற பயணிகள்…

33 minutes ago

அவன் கூட பேசாத… மற்றொரு கள்ளக்காதலனைத் தீர்த்துக்கட்டிய பெண்… காவிரி ஆற்றில் மிதந்த சாக்குமூட்டை… சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி நாடகம்…!

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூர் காவிரி ஆற்றில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாக்கு மூட்டை ஒன்று…

46 minutes ago

பெங்களூர் காப்பகத்தில் பயங்கரம்… கழிப்பறையை கண்டாலே அலறும் 2 வயது குழந்தை… வீடியோவில் சிக்கிய கொடூரம்…!

பெங்களூரில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் நடந்த மாபெரும் அத்துமீறல்களும், அங்கிருந்த பெண்களின் கொடூரமான சித்திரவதைகளும் தற்போது வெளிச்சத்திற்கு வந்து…

57 minutes ago

தவெக-வில் இருந்து வந்த செம ஆஃபர்…. அதிமுகவில் இருந்து விலகும் Ex அமைச்சர் வளர்மதி?…. சலசலப்பை அடக்கிய அப்சரா ரெட்டியின் ட்வீட்…!

முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்…

1 மணத்தியாலம் ago