விஜய்க்கு தைரியம் இருந்தா இத பண்ண சொல்லுங்க…. ஒத்தைக்கு ஒத்த நான் ரெடி…. புதிய பரபரப்பை கிளப்பிய இளங்கோவன்…!

Spread the love

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக திமுக செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இரு கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இன்று மாலைக்குள் ஒரு ‘நல்ல செய்தி’ வெளியாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொகுதிப் பங்கீடு தொடர்பாக இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை காங்கிரஸ் மூத்த தலைவர் பா. சிதம்பரம் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பு மிகவும் இணக்கமான சூழலில் நடந்ததாகவும், முந்தைய பேச்சுவார்த்தைகளில் நிலவிய இழுபறி தற்போது நீங்கி சுமூகமான தீர்வு எட்டப்பட வாய்ப்புள்ளதாகவும் இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை தளர்த்தி பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளதே இதற்குக் காரணம் என அவர் தெரிவித்தார்.

இதே செய்தியாளர் சந்திப்பில், தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி நிர்மல் குமார் திமுக மீது வைத்த விமர்சனம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டி.கே.எஸ். இளங்கோவன், “தமிழக வெற்றி கழகத்திற்கு அரசியலே தெரியாது. நடிகர் விஜய் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடுதான் அரசியலுக்கு வந்துள்ளார்; அவருக்கு மக்கள் நலன் சார்ந்த சிந்தனைகள் இல்லை” என்று காட்டமாக விமர்சித்தார்.  மக்களுக்குத் தேவையான போராட்டங்களில் ஈடுபடாமல் பதவி ஆசையோடு பேசுபவர்களின் கருத்துகளுக்குப் பதில் சொல்லத் தேவையில்லை என்றும் அவர் சாடினார். மேலும், விஜய்க்கு தைரியம் இருந்தால் மணிப்பூரில் நடக்கும் விஷயத்தை பற்றி கண்டிச்சி பேச சொல்லுங்க பாப்போம். பாஜகவை எதிர்த்து பேசுவதற்கே அவர் பயப்படுவார் என்று விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழலில், திமுக கூட்டணிக்குள் நிலவும் தொகுதிப் பங்கீடு சிக்கல்கள் முடிவுக்கு வருவது அக்கட்சிக்கு ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. மாலைக்குள் கூட்டணி இறுதி செய்யப்பட்டால், அடுத்து வரும் நாட்களில் வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் பரப்புரைப் பணிகள் இன்னும் வேகம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் மற்றும் திமுக இடையிலான இந்த உடன்பாடு தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

முடிவுக்கு வராத கொடூரம்… ஜெம் வீரமணி மீது பாய்ந்த 8-வது வழக்கு… சிறைக்குள்ளும் குறையாத சிக்கல்… வெளியான பகீர் வாக்குமூலம்…!!

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகார்களின் பேரில் தமிழ்நாடு…

8 மணத்தியாலங்கள் ago

பலே கில்லாடி!.. ரூ.37 லட்சம் கள்ள நோட்டு… கலர் ஜெராக்ஸா? ஒரிஜினலா?… போலீசையே ஆச்சரியப்படுத்திய மிஷின் வித்தை… பகீர் பின்னணி…!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வாடகை செலுத்த முடியாத நிலையில் இருந்த நபர் ஒருவர், ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சடித்ததாகக் கூறப்படும் சம்பவம்…

8 மணத்தியாலங்கள் ago

சட்டம் ஒருவருக்கு ஒரு நீதியா?… நீதிபதி மகனின் வேட்டை… தூக்கி வீசப்பட்ட முதியவர்… நள்ளிரவில் பறிபோன அப்பாவி உயிர்… அடுத்து நடக்கப்போவது என்ன?…!!

கேரள மாநிலம் கொச்சி சேரநல்லூர் பகுதியில், கூடுதல் அமர்வு நீதிபதி ஒருவரின் 17 வயது மகன் ஓட்டிச் சென்ற மெர்சிடிஸ்…

8 மணத்தியாலங்கள் ago

அடபாவேமே..! புருஷன் கூட இல்லைனு அசிங்கப்படுத்துனாங்க… வாடகை வீட்டில் நடந்த அநியாயம்… சின்மயி உடைத்த ரகசிய வேதனை…!!

திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி, தான் திரையுலகில் பிரபலமாவதற்கு முன்பு தன் தாயாருடன் சேர்ந்து வாடகை வீடு தேடிய தருணங்களில்…

9 மணத்தியாலங்கள் ago

அடபாவேமே..! “அவள விட குறைவா எடுத்தியே…” பெற்றோரின் வார்த்தை… ஒரே வகுப்பில் இரட்டை சகோதரிகள்… 10-ம் வகுப்பு மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவு…!!

சென்னை திருவேற்காடு சுந்தரசோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள்களான பிரியங்கா மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவரும் 15 வயதுடைய…

9 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… திக்… நிலத்தகராறில் வெடித்த கொடூரம்… நடுரோட்டில் குண்டுவீசி, துப்பாக்கிச் சூடு நடத்திய முகமூடி கும்பல்… குலை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!

பீகார் மாநிலம் கயாவில் உள்ள சந்தௌதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில், நிலத்தகராறு காரணமாக பெரும் கலவரம்…

9 மணத்தியாலங்கள் ago