தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார். இருப்பினும், ஆளும் திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், அவரைத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைக்கப் பாரதிய ஜனதா கட்சி தீவிர முயற்சி எடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அமைச்சர் அமித் ஷாவின் அறிவுறுத்தலின் பேரில், ஆந்திர துணை முதலமைச்சரும் விஜய்யின் நெருங்கிய நண்பருமான பவன் கல்யாண் இந்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை விஜய் கூட்டணிக்கு வந்தால், அவருக்கு இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் (CM) பதவி வழங்கப்படலாம் என்ற கவர்ச்சிகரமான சலுகையை பவன் கல்யாண் முன்வைத்துள்ளதாகச் செய்திகள் உலா வருகின்றன.
இந்த மெகா ஆஃபர் குறித்து விஜய் இதுவரை எந்தப் பச்சைக்கொடியும் காட்டவில்லை. தற்போதைய சூழலில், அவர் பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தனித்துப் போட்டியா அல்லது கூட்டணியா என்பது குறித்த இறுதிக்கட்ட முடிவை அவர் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…