கரூர் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தமிழக முதல்வர் விஜய் தனிப்பட்ட முறையில் கடும் அதிருப்தியிலும் கோபத்திலும் இருந்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த கால அரசின் போதிய பாதுகாப்பு குறைபாடுகளாலேயே கரூர் துயர சம்பவம் நிகழ்ந்ததாகவும், தன்னைக் காண வந்த மக்களின் உயிர்களோடு விளையாடியதற்கு உரிய பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் முதல்வர் விஜய் தனது நெருங்கிய வட்டாரத்தில் ஆதங்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக, முன்னாள் அமைச்சர்களில் முதற்கட்டமாக செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டப்படியான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி, அவரை சிறைக்கு அனுப்பும் பணிகளில் முதல்வர் மிக தீவிரமாக களம் இறங்கியுள்ளார்.
ஏற்கனவே செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அவர் மீண்டும் சிறைக்குச் சென்றால் எளிதில் வெளியே வர முடியாதபடி வழக்குகளை மிக வலிமையாக்க முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக அண்மையில் முக்கிய உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசித்த முதல்வர், செந்தில் பாலாஜி கடந்த காலத்தில் செய்த முறைகேடுகள் அனைத்தையும் முழுமையாகத் தோண்டி எடுக்க வேண்டும் என்றும், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) அவர் மீது புதிய வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக எந்த அதிகாரியாவது செயல்பட்டால் உடனடியாகத் தனக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் கறாராக அறிவுறுத்தியுள்ளார்.
இந்த ஜூன் மாத இறுதிக்குள் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை இறுதி செய்ய வேண்டும் என்பதில் முதல்வர் விஜய் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, அண்மையில் மேற்கொண்ட டெல்லி பயணத்தின் போதும், செந்தில் பாலாஜி தொடர்பான அமலாக்கத்துறை விசாரணைக்குத் தமிழக அரசின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும் தங்கு தடையின்றி வழங்கத் தயாராக இருப்பதாக முதல்வர் விஜய் டெல்லி தரப்பிடம் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டப் போராட்ட வளையத்தை இருமுனைகளிலும் இறுக்க முதல்வர் விஜய் தீவிரமாகச் செயலாற்றி வருகிறார்.
2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஒன்றாக அமர்ந்து பார்ப்பதற்காக ஒரு குடும்பத்தினர் தங்களது வீட்டுத் தொலைக்காட்சியின் முன்னால்…
சென்னையில் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம்,…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட நிஹாரிகா என்ற…
உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்ட அரசு மருத்துவமனையில், உயிரிழந்த பெண்ணின் உடலிலிருந்து கம்மலைத் திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து…
மத்திய அரசின் 'பிஎம் உஜ்வாலா யோஜனா 3.0' திட்டத்தின்கீழ், வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு புதிய எல்பிஜி…