கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சமீபத்தில் நேரில் சந்தித்து பேசி இருந்தார். இதனைத் தொடர்ந்து கட்சி பணிகளை தொடங்கியுள்ள விஜய் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இன்று தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், நிர்மல் குமார் மற்றும் விஜயலக்ஷ்மி என நீளும் பட்டியலில் பெரும்பாலும் ஆதவ் அர்ஜுனாவின் ஆதரவு ஆட்களே உள்ளனர்.
மாறாக கட்சி பொதுச்செயலாளர் ஆனந்துக்கு ஆதரவான நபர்கள் மொத்தமாக ஓரம் கட்டப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் யாரும் குழுவில் இடம்பெறவில்லை என்று கூறப்பட்ட நிலையில் ஒருவரின் பெயர் மட்டுமே உள்ளது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு விஜய் செல்ல கூடும் என தகவல் பரவும் நிலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.
