துணை முதல்வர் பதவி, 75+ சீட் எதுவுமே வேண்டாம்… ADMK-க்கு அல்வா கொடுத்து விட்டு… முக்கிய கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் விஜய்..!!

By Soundarya on ஆவணி 9, 2025

Spread the love

தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு தமிழக வெற்றிக்கழகம் பெயரில் நடிகர் விஜய் கட்சியை தொடங்கி தன்னுடைய அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். மேலும் கூட்டணி என்ற  பேச்சுக்கே இடமில்லை என்று கூறி தனித்து போட்டியிட இருக்கிறார். மேலும் இந்த மாதம் மதுரையில் அக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. குறிப்பாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் எட்டு மாதங்கள் உள்ள நிலையில் மதுரை மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் தீவிரமாகியுள்ளது. இதற்கிடையில், TVK தலைவர் விஜய்க்கு துணை முதல்வர் பதவி, 75+ சீட் என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்டால், எந்த நேரத்திலும் அதிமுக கூட்டணியில் இணையலாம்என்று பேச்சுக்கள் அடிபட்டது. ஆனால், அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இணைய மறுத்துவிட்ட விஜய், தமிழ்நாட்டின் முக்கிய கட்சி உடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறறது.