கில்லி பட விஜய் தங்கச்சி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?.. இப்படி ஒரு தொழில் பண்ணிட்டு இருக்காங்களா..!

By Nanthini on பங்குனி 19, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நிறைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகாமல் போன நடிகை தான் நான்சி ஜெனிஃபர். 1991 ஆம் ஆண்டு வெளியான கிழக்குக்கரை திரைப்படத்தில் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பிறகு பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். தியாகம், சக்தி, நேருக்கு நேர், சந்திப்போமா என பல திரைப்படங்களில் நடித்தாலும் கூட அவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தந்த திரைப்படம் கில்லி தான். இந்த திரைப்படத்தில் இவர் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்திருப்பார்.

33 வயசாகுது.. எனக்கு கல்யாணம் ஆகல.. குழந்தை இல்லை.. 'கில்லி அரிசிமூட்டை'  என்ன இப்படி சொல்லிட்டாங்க! | Ghilli fame Nancy Jennifer still single at the  age of 33 and shares about ...

   

புவனா என்ற அந்த கதாபாத்திரம் கிட்டதட்ட திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரமாக அமைந்தது. இதனை தொடர்ந்து அந்த படத்தில் இருந்து அவருக்கு வரவேற்புகள் கிடைக்க தொடங்கின. அதன் பிறகும் பல திரைப்படங்களில் ஜெனிபர் நடித்து வருகின்றார். ஆனால் திரைப்படத்துறை மீது அவருக்கு பெரிதாக எந்த ஒரு ஆர்வமும் இல்லை என்று தான் கூற வேண்டும். எப்போதாவது ஒருமுறை தான் அவர் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

   

PHOTOS: விஜய்யின் ரீல் தங்கையா இது? ஆள் அடையாளமே தெரியலையே.. போட்டோஷூட்டில்  கலக்கும் நான்சி ஜெனிபர்! | Actress Nancy Jennifer Stunning Photos -  Oneindia Tamil

 

இந்த நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி பகிர்வது வழக்கம். அவர் கேரட் சோப் தயாரிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சரும பராமரிப்புகளுக்கான ஆர்கானிக் பொருட்களை அவர் தயார் செய்து வரும் தொழிலை தான் செய்து வருகிறார். தற்போது அது தொடர்பான வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகிய வருகிறது.

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Nature’s Joy Herbal Cosmetics பதிவைப் பகிர்ந்துள்ளார் (@natures__joy)